நீர்கொழும்பு கலவரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு - பிரதமர்

Ceylon Muslim
நேற்று (05) நீர்கொழும்பில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்ட பின்பு அவற்றுக்கான நஷ்ட ஈடுகளை வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் கீழ் காணப்படும் இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்தினால் சேதங்களை மதிப்பிடுவதற்குத் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

6/grid1/Political
To Top