கல்முனையில், இரத்த கறையுடன் கார் கண்டுபிடிப்பு

NEWS


அடையாளப்படம்
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து நாடு முழுவதும் முப்படையினரும் எந்நேரமும் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முப்படையினரும் தொடர்ந்து நடாத்தி வரும் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது நாடு முழுவதும் பரவலாக இராணுவ சீருடைகள், வெடிபொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இரத்த கறையுடன் கூடிய ஈ.பி.கே.எம் 5059 என்ற இலக்கத் தகடு பொருத்தப்பட்ட சிற்றூர்ந்து மற்றும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொலைப்பேசியொன்று பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கல்முனைகுடி பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
6/grid1/Political
To Top