சாய்ந்தமருதில் தீவிரவாதிகள் இருக்குமிடத்தை பாதுகாப்புப் படைக்கு தெரியப்படுத்தியவர்கள் யார்?
#சம்மாந்துறையில் தீவிரவாதிகள் இருந்த இடத்தை பாதுகாப்புப் படைக்கு காட்டிக் கொடுத்தவர்கள் யார்?
மாவனலையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தமைக்காக சொந்த மகளையே பாதுகாப்புப் படையிடம் காட்டிக் கொடுத்த் தந்தை யார்?
இன்றுவரை தீவிரவாதிகளுக்கு எதிராக முப்படையினருடனும் இணைந்து, அவர்களுக்கு ஒத்தாசை புரிந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு என்ன பெயர் சூட்டப் போகிறீர்கள்?
ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாத கண்கொண்டு பார்க்கும் சில மாற்று மத சகோதரர்களிடம் கேட்கிறேன்
இனவாதமும் தீவிரவாதமும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்
இதனால் பாதிக்கப்படப் போவது நாம் அனைவரும்தான்
அனைத்தின மக்களினதும் ஒற்றுமையே போதுமானது
வென்றுவிடலாம் தீராத தீவிரவாதங்களையும்.
இப்படி முடியும் முஸ்லிம்களால் மாத்திரமே. இலங்கையில் இதற்கு முன்னர் இவ்வாறு நடந்திருந்தால் இத்தேசம் இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும்