ஞானசார தேரரை விடுவித்தமை தவறானது .!
நீதிமன்றம் செல்லத் தயாராகும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு..!!
ஞானசார தேரர் விடுதலையை ஆட்சேபித்து ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று தயாராகி வருகிறது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளார் ஞானசார தேரர்.அதற்கான ஆவணங்கள் தயாராகியுள்ளன.
இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்ற ஞானசார தேரரை விடுவித்தமை தவறான முன்னுதாரணம் என தெரிவித்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளனர்.இது தொடர்பிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனால் நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறைக்குமிடையில் மீண்டுமொரு மோதல் ஏற்படும் நிலை உருவாகவுள்ளது.