நீர்கொழும்பு பதற்ற நிலை நடந்தது என்ன ? படங்கள் #Negombo tense situation

Ceylon Muslim
Post By: QatarBaranch- Ceylon Muslim Media

நீர்கொழும்பில் பகுதியில் இன்று(05) மாலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்தே பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு முச்சக்கரவண்டி ஒன்று உடைக்கப்பட்டு கலவர நிலை உருவானது. மேலும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நீர்கொழும்பு, பலகத்துறை, தைக்கா வீதியில் இருவருக்குடையே இடம்பெற்ற தனிப்பட்ட தகராரே இவ்வாறு இரு சமூக பிரச்சினையாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் தற்போது விசேட அதிரடிப்படை, இலங்கை விமானப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் நாளை காலை 7 மணிவரை குறித்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

6/grid1/Political
To Top