அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட 60 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை விரைவாக ஆரம்பிக்கும் படி கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், பாராளுமன்றில் சமர்ப்பிப்பதது தொடர்பில் சபாநாயகர் , கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்த பின்னரே சமர்பிக்கப்படும்