Top News

NTJ வைத்தியரால் “பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு” சர்ச்சை செய்தி

இன்றைய திவயின சகோதர மொழி பத்திரிகையில் வெளியாகியிருந்த “பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு” தொடர்பான செய்தியின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி இன்று பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளது.

தௌஹீத் அமைப்பைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர், சுமார் 4000 பௌத்த தாய்மார்களுக்குச் செய்துள்ளதாக இன்றைய திவயின பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை குறித்த செய்தி தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைத் தொடர்புகொண்டு விபரம் கேட்டதாகவும், அவ்வாறு எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறியதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த செய்தி தொடர்பான உண்மைத் தன்மையை நாளையதினம் பாராளுமன்றில் முன்வைக்குமாறும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார். 

Previous Post Next Post