ஒரு நாளைக்கு சராசரியாக 3000 பேருக்கு கடந்த நான்கு வருடங்களாக இலவச உணவு வழங்கிய முஸ்லிம்கள் நடத்தும் தர்ம நிறுவனத்தை இன்றுடன் மூடிவிடுவதாக தகவல்கள் கிடைக்கின்றன...!!
“எங்க இருந்துமா கிளினிக்குக்கு வாறீங்க?”
“............. இருந்து”
“பஸ்லயா வாறீங்க?”
“ஓம், 40 ரூபா கொடுக்கோணும்”
“என்ன வருமானம் அம்மா உங்களுக்கு?”
“வீட்டு வேலை செய்யப் போற, ஒரு நாளைக்கு ஒரு இரு நூறு ரூபா கிடைக்கும். போனாத்தான் காசு, போகாட்டி வேல இல்ல”
“இதென்ன கையில துண்டு?”
“இதா, இந்த நேர்ஸ் மிஸ் தந்தாங்க, பகல் சாப்பாட்டு டோக்கன்”
“பகல் சாப்பாடு டோக்கனா? யாரு தர்ராங்க?”
“தெரியாதா டாக்டர் உங்களுக்கு? நான் கிளினிக் வாற நாள்களில் இங்கதான் சாப்புர்ர, எல்லாம் இலவசம். இந்த துண்ட காட்டினா போதும்”
இலவசமா சாப்பாடு கொடுக்குறாங்களா? இவ்வாறுதான் எனக்கு இந்த ஜனபோஷ அறிமுகமானது. இதை யார் செய்கிறார் என தேடிப்பார்த்ததில், இலங்கையின் முண்ணனி முஸ்லிம் வர்த்தகர்களில் ஒருவரான expo lanka ஹாஜியாரின் பெயர் வெளிவந்தது.
கொழும்பு மற்றும் மகரகமை பிரதேச பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் அமைந்த, மிகப் பெறுமதியான காணிகளை விலை கொடுத்து வாங்கி, இந்த வைத்தியசாலைகளுக்கு வரும் ஏழைகளுக்கு இலவசமாக காலை மற்றும் மதிய உணவுகளை வழங்கி வந்தார்.
ஒரு நாளைக்கு சராசரியாக 3000 பேர். இது கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வந்தது. கிளினிக் மற்றும் வாட்டுக்களில் உள்ள மிஸ்மாரிடம் டோக்கன்கள் இருக்கும். அவர்கள் அங்கு வரும் ஏழைகளுக்கு கொடுப்பார்கள். அதை அவர்கள் அங்கு கொண்டு கொடுத்து சாப்பிட்டுச் செல்வார்கள்.
இதில் பயனடைந்த அத்தனை பேரும் ஏழை எளிய இலங்கையர்கள். இந்த நிலையத்தை இன்றுடன் மூடிவிடுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. காரணம்- பல மில்லியன் கணக்கான ரூபாய்களுக்கு சொந்தக்காரரான ஒரு அரசியல்வாதி, இந்த முஸ்லிம்கள் நடத்தும் தர்மத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்ததுதான்.
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வருவதையே இழுக்காக கருதும் இந்த வர்க்கத்திற்கு ஏழைகளின் பசி எங்கே புரியப்போகிறது?
(By: Dr. Ahmed Nihaj)
Post a Comment