நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு காரணம் 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதன் காரணமாக நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
அடுத்த ஜனாதிபதியாக யார் வந்தாலும் நாட்டை நேசிப்பவராக இருந்தால் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் அதுவே நாட்டுக்கு சிறந்தது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள இராணுவ உடன்படிக்கைக்கு (சோபா) தான் முற்றாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமித்துள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், தான் ஒருபோதும் அங்கு ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
அந்தத் தெரிவுக்குழு அலரி மாளிகையால் கதை எழுதப்பட்ட ஒரு நாடகம் என்று ஜனாதிபதி கூறினார்.
Post a Comment