முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாட்சியம் வழங்குவதற்காக இன்றைய தினம் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகினார்.
எனினும் இன்றைய தினம் அவரிடம் விசாரணை நடத்தாமல் ஒத்தி வைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதன்படி எதிர்வரும் 28ம் திகதி 2.30 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02.30 மணியளவில் மீண்டும் கூடியது.
இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் சாட்சி வழங்கினர்.
இதன் போது சாட்சியம் வழங்கிய இராணுவத்தளபதி ரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கி,ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டை நீக்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான செய்திக்கு.....
Post a Comment