முஸ்லிம் எம்.பிகளின் கூட்டம், முடிவு இல்லாமல் நிறைவு

NEWS
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் காசிம் தெரிவித்துள்ளார். 

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சுப் பதவிகளை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பிலேயே இன்று (18) கலந்துரையாடப்பட்டுள்ளது. 

பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் சில மணி நேரங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தக் கலந்துரையாடலில் அண்மையில் பதவி விலகிய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். 

எனினும் இந்தக் கலந்துரையாடலானது எவ்வித இணக்கப்பாடுமின்றி நிறைவுப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6/grid1/Political
To Top