முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதால், நாடாளுமன்றில் மாற்றம்...

NEWS
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது உறுப்பினர்களுக்கான ஆசனங்களில் மாற்றம் ஏற்படும் என நாடாளுமன்ற அதிகாரி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் செயற்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளதுடன், ராஜினாமா கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பதவி விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்களுக்கு பின்னால் உள்ள ஆசனங்கள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

எனினும் கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கமைய முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதின் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த கபீர் ஹசீம் ஆகியோருக்கு முன்வரிசை ஆசனம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6/grid1/Political
To Top