அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு மாநாயக்க தேரர்கள் கோரவில்லை : அத்துரலிய ரதன

NEWS


அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு மாநாயக்க தேரர்கள் கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த போது அவர் இதனை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், அண்மையில் தங்களது அமைச்சுப் பதவிகளை துறந்திருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீளவும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு மாநாயக்க தேரர்கள் கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை பதிவு செய்வதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் கிடையாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சிடம் தகவல் கோரியதாக அங்கு தகவல்கள் இருக்கவில்லை எனவும் அதற்கான தனியான பிரிவொன்று உண்டு எனவும் அங்கு தகவல் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் கூறியதாகவும் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top