மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸாரைக் சுட்டுக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாகக் கூற்படும் இரு மோட்டர் சைக்கிள்களை காத்தான்குடி மற்றும் ரிதிதென்னை பிரதேசத்தில் நேற்று (15) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸா ர் இருவரைத் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த இரு கைது துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
அஹமது மில்கான்
இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சவூதி அரோபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த அஹமது மில்ஹான், மற்றும் ஸஹ்ரானின் சாரதியான கபூர் ஆகிய இருவரும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல்சர் ரக, மோட்டார் சைக்கிளை காத்தான்குடியில் உள்ள மில்கானின் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.
மேலும், பொலன்னறுவை மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமான ரிதிதென்னை பகுதியில் உள்ள கபூரின் நண்பனின் வீட்டில் வைத்து சூட்டிப் பப் ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.