கல்முனை: தமிழர்களின் போராட் டத்தில் இணைந்த அத்துரலிய.

NEWS
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் நேரில் சென்று ஆதரவு வழங்கியுள்ளார்.

அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி சர்வ மதத்தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அங்கு தேரர், முஸ்லிமக்கள்  தொடர்பில் பிழையான  பேச்சுக்களை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது 
6/grid1/Political
To Top