பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமத அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கூட்டாக பதவி விலகியமை சர்வதேச மட்டத்திலும் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஒரு சிலரின் தவறான செயற்பாடுகளை கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது முற்றிலும் தவறானதாகும்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலை ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் ஒரு அரசியல் பிரச்சாரமாகவே பயன்படுத்திக் கொண்டது. பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசியல்வாதிகளும் பொறுப்பற்ற விதமாக கருத்துக்களை குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
அரசியல்வாதிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலே ஒரு விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கியிருக்க வேண்டும். அரசியல் தேவைகளுக்காக எல்லை மீறி செயற்பட்டுள்ளமையினால் சாதாரண மக்கள் இன்று பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.