கல்முனையில் பதற்றம்: தமிழ் தலைவர்கள் விரட்டியடிப்பு

NEWS
கல்முனையில் தனி தமிழ் பிரதேச செயலகம் கோரி நடத்தப்படும் உண்ணாவிரதம் இருப்போரை சந்திக்கச் சென்ற அரச அமைச்சர்மார் மற்றும் எம் பிக்கள் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க மூன்று மாத காலம் தேவையென அமைச்சர் வஜிர கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய உண்ணாவிரதமிருந்தோர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைச்சர்மாரை வெளியேறுமாறு கேட்டனர்.

இதனால் அமைச்சர்மார் மனோ கணேசன், தயா கமகே , சுமந்திரன் எம்பி ஆகியோர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .தமிழன் 

இதேவேளை தீர்வுகளை பெற்றுக்கொண்டுக்க நினைக்கும்தலைவர்கள் விரட்டியடிக்கப்படுவதும், இனவாதம்பேசும் தமிழ் தலைவர்களை ஆதரிக்கும் போராட்டமாகவே இது உள்ளதென்வும், இதற்கு பின்னால் இனவாத அரசியல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
6/grid1/Political
To Top