Top News

தேர்தலை இலக்காகக் கொண்டு மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகின்றனர்



நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை விட , தாக்குதல்களுக்கான காரணம் குறித்து ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், பௌத்த விஹாரைகள் உள்ளிட்ட ஏனைய மதஸ்தலங்களுக்கும் வழிபாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் மக்கள் மத்தியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோர் பாடசாலைகளைக் காவல் காக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களிலும் இதே நிலைமையே காணப்படுகின்றது.

அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளால் நாட்டில் மதம் மற்றும் வரலாற்றின் மீதுள்ள நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.

அடிப்படைவாதிகளால் நாடாளுமன்றமும் உறுதியற்றுப் போயுள்ளது. சில அரசியல்வாதிகள் தேர்தலை இலக்காகக் கொண்டு மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகின்றனர் என்றார்.
Previous Post Next Post