மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் அறையிலிருந்து 4 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துமிந்த சில்வாவின் செல்பி புகைப்படம் ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், சிறைச்சாலையின் 3ஆம் இலக்க வைத்தியசாலை அறையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, அங்கு கழிப்பறையிலிருந்து ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும், சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட தொலைபேசிகளிலுள்ள சிம் அட்டைகளும் மேலதிக பரிசோதனைக்காக குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (ஸ)