Top News

ஏன்கல்முனை உபபிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதில் முஸ்லீம்கள் எதிர்க்கின்றனர்?



கல்முனை பிரதேச செயலகப் பிரிப்பும் துளிர் விட்டு வளரும் இனவாதமும்...

வரலாற்றுப் பின்னணி

கல்முனைப் பிரதேசம் என்பது முஸ்லீங்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டு காணப்படும் ஒரு வர்த்தக பூமியாகும்.

1887ம் ஆண்டு சனிற்றரி வோட் சட்ட மூலத்தின் மூலம் கல்முனை பட்டின சபையாக வரையறுக்கப்பட்டது. 

1947ம் ஆண்டு பட்டின சபையாக தரமுயர்த்தப்பட்டது. இப்பட்டின சபை 07 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு நிருவாகம் நடாத்தப்பட்டது. இந்த 07 வட்டாரங்களில் 05 வட்டாரங்கள் முஸ்லிம் வட்டாரங்களாகவும் 02 வட்டாரங்கள் தமிழ் வட்டாரங்களாகவும் வகுக்கப்பட்டிருந்தது. அப்போது வாக்காளர்களாக 6904 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 5131 பேர் முஸ்லிம்களாக இருந்துள்ளனர். இதிலிருந்து கல்முனை பிரதேசம் என்பது முஸ்லீங்கள் அதிகமாக வாழ்ந்த பூமி என்பதை பறைசாற்றுகிறது.

1947-1977 வரை வருமானத்தினை சேகரிக்கும் DRO (வருமானவரி சேகரிப்பாளர்கள்) நியமிக்கப்பட்டனர். அதன்மூலம் ஒரு சில நிருவாக கடமைகள் மேற்கொள்ளப்பட்டன. 
------------------------------------------------------
உதவி அரசாங்க அதிபர் (AGA) நிருவாகப் பிரிவு
..........................,..................................
பொது நிருவாகத்தினை சரிசெய்யும் நோக்கில் உதவி அரசாங்க அதிபர் பதவிகளும் காரியாலயங்களும் நாடாளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டன.

அதனடிப்படையில்
1978ம் ஆண்டு கல்முனைப் பிரதேசம் கரவாகுப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

கல்முனையின் முதலாவது AGA ஆக கால்டீன் (1978 – 1983) என்பவர் கடமையாற்றினார்.

1983-1992 வரை எம்.எச்.எம்.மொயினுடீன் என்பவரும் AGA ஆக பணிபுரிந்தார்கள்.

1978ம் ஆண்டுகளில் 23 கிராமசேவகப் பிரிவுகள் காணப்பட்டன. அந்தவகையில்
நீலாவணை - 02
மருதமுனை – 02
பாண்டிருப்பு – 02 
நற்பிட்டிமுனை - 02 (முஸ்லிம்-01,தமிழ்-01)
சேனைக்குடியிருப்பு -01
கல்முனை – 03
கல்முனைக்குடி – 05
சாய்ந்தமருது – 06 பிரிக்கப்பட்டு காணப்பட்டது.

இப்பிரிவுகளானது 1989களில் 76 கிராம சேவகப் பிரிவுகளாகப் பிரிக்ப்பட்டது. 

இதில் 2001ம் ஆண்டு 17 கிராமசேவகப் பிரிவுகளுடன் சாய்ந்தமருது பிரதேச செயலகம் கல்முனையிலிருந்து பிரிந்து சென்றது.

AGA நிருவாகத்திற்குப் பின்னர் மீண்டும் இலங்கையின் பொதுநிருவாகம் திருத்தியமைப்பட்டு பிரதேச செயலகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அந்தவகையில் 1992ம் ஆண்டு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டு அதற்குப் பொறுப்பாக பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

1992-1994 மர்ஹூம் ஏ.எல.எம்.பழீல்
1994-1995 எம்.ஐ.அமீர்
1996-2003 மர்ஹூம் ஏ.எல.எம்.பழீல்
2003-2007 ஏ.எச்.எம்.அன்சார்
2007-2014 எம்.எம்.நௌபல்
2015-2018 எம்.எச்.எம்.கனி போன்றோர் பிரதேச செயலாளர்களாக கடமை புரிந்தனர்.

இதேவேளை ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டது போன்று உதவிப் பிரதேச செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.


பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்கள் ஒரு கூரையின் கீழ் இருந்தே மக்களுக்கு பணி செய்தனர். இவ்வாறான சேவைகள் பல பிரதேச செயலகங்களில் காணப்பட்ட போதிலும் கல்முனையில் மாத்திரம் பிரதேச செயலாளருக்கு ஒரு காரியாலயமும் உப பிரதேச செயலாளருக்கு ஒரு காரியாலயமும் என இயங்க ஆரம்பித்தன. இதற்கு அன்றய காலத்தில் நிலவிய பயங்கரவாத சூழ்நிலையே காரணமாக அமைந்தன. 

தமிழ் மக்கள் தங்களது நிருவாகத்தினை தாங்களே மேற்கொள்ளவேண்டும் என்ற பிடிவாதமும் கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இருக்க முடியாது என்ற இனவாதமுமாகும். 

1989ம் ஆண்டிற்கு பின்னர் கல்முனைப் பிரதேச செயலகத்திற்கு கீழ் 29 கிராமசேவகப் பிரிவுகளும் உப பிரதேச செயலகப் பிரிவிற்கு கீழ் 29 கிராம சேவகப் பிரிவுகளும் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 

கல்முனை உபபிரதேச செயலகத்தினால் தமிழ் மக்கள் நிருவகிக்கப்பட்டதனால் கல்முனை பிரதேச முஸ்லிம் மக்கள் கல்முனை செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டு வருகின்றனர்.

கல்முனை பிரதேச செயலகத்தினால் 29கி.சே.பிரிவுகளில் 47493 முஸ்லிம் மக்கள் நிருவகிக்கப்படும் அதே வேளை உப பிரதேச செயலகத்தினால் 31709 பேரும் நிருவகிக்கப்படுகின்றனர். இதனால் கல்முனை உப பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரதேச செயலகமாக பிரகடனப்படுத்தப்பட்டதனால் கல்முனை பிரதேச செயலகம் முஸ்லிம் பிரதேச செயலகமாக மக்களால் அழைக்கப்படலாயிற்று.

இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகியது. இன ரீதியான செயலகங்களாக இரண்டாகப் பிரிந்து நிருவாகங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டு காரியாலயங்களுக்குமான நிருவாகப் போட்டி நிழலாக நின்றதனால் அதற்காக இரு இனங்களும் ஆதரவுக்காக அழைக்கப்பட்டன.

உப பிரதேச செயலகத்திற்கு காணி தொடர்பான அதிகாரங்களும் நிதி தொடர்பான அதிகாரங்களும் மாத்திரமே வழங்கப்படவில்லையே ஒழிய மற்றய சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு ஒரு முழுப் பிரதேச செயலக தரத்தில் செயற்பட்டு வருகிறது.

காணி, நிதி தொடர்பான அதிகாரங்கள் இல்லை என்பது பேரளவிலேயே இருந்தாலும் அவை தொடர்பான கருமங்கள் ஆற்றப்படாமலில்லை.

உப பிரதேச செயலக தரமுயர்த்தல் கோரிக்கையும்; எதிர்ப்பு நடவடிக்கையும். 
"""""""""""""""""""%""""""""""""""'""""""""'"""""

1989ம் ஆண்டிலிருந்து உப பிரதேச செயலகமாகக் காணப்படும் செயலக்கத்தினை தரமுயர்த்தக் கோரி தமிழ் மக்கள் பல்வேறுபட்ட முயற்சிகளைச் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது அரசியல் வாதிகளினூடாக பாரிய அழுத்தங்களையும் செய்து வருகின்றனர். அவ்வாறான அழுத்தங்களின் உச்சக்கட்டமே இந்த உண்ணா விரதப் போராட்டமாகும்.

28உப பிரதேச செயலங்கள் காணப்பட்ட போதிலும் 27 செயலகங்கள் தரமுயர்த்தப்பட்ட போதிலும் கல்முனை உப பிரதேச செயலகம் இன்னும் தரமுயர்த்தப்படவில்லை என்பது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அனீதியாகும் என்ற வலுவான கோரிக்கையினை முன்னிறுத்தி பாராளுமன்றம் வரை தமது பிரச்சினையினை முன்னெடுத்துச் சென்றுள்ளார்கள். 

இப்பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் நாடகங்களும் அரங்கேற்றப்படாமலுமில்லை. ஒவ்வொரு தேர்தல்களின் போதும் இந்த விடயம் மூலதனமாக இருசமூகத்தினைச் சேர்ந்த அரசியல் வாதிகளாலும் தாராளமாக கையாளப்பட்டன.

உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதில் முஸ்லீங்களுக்கு என்ன பிரச்சினை ???
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உப பிரதேச செயலகத்தினை தரமுயர்துவதால் முஸ்லீம்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

அப்படியானால் ஏன் முஸ்லீம்கள் எதிர்கிறார்கள்.

1.தமிழ் மக்கள் கோரும் பிரதேச செயலக எல்லைக்குள் (கல்முனை வடக்கு) 3000ற்கு மேற்பட்ட முஸ்லீங்களின் வாழ்விடங்கள் உள்வாக்கப்பட்டுள்ளன.

2. ஐந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இரண்டு மதரசாக்கள் மூன்று மையவாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

3.கல்முனை முஸ்லீங்கள் அதிகமாக நேசிக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பள்ளிவாசல்கூட அந்த எல்லைக்குள்தான் வருகிறது.

4.கல்முனை பொதுச் சந்தை
5.கல்முனை பசார்
6.கல்முனை கடைத் தொகுதிகளும் வர்த்தக நிலையங்களும்
7.கல்முனை பஸ் தரிப்பு நிலையம்
8.கல்முனை பொலி்ஸ் நிலையம்
9.கல்முனை நூலகம்
10.கல்முனை பிரதேச செயலகம்
11.கல்முனை மாநகர சபை
12.சகல வங்கிகள்
13.சகல அரச காரியாலயங்கள்

14. கல்முனை பிரதேசத்தில் காணப்படும் கல்முனைக் கண்டம் ,இறைவெளிக்கண்டம், நற்பிட்டிமுனை மேல்,கீழ் கண்டங்கள் மேட்டுவட்டை வயல் காணிகள் , கரவாகு வட்டைக் காணிகள் என அனைத்து வயல் காணிகளும் அவர்கள் கோரும் எல்லைக்குள்ளே வருகின்றன. 

15. நீர் நிலைகளான பட்டிப்பளை ஆற்றுப்படுக்கை,கல்லடிக்குளம்,பாண்டிருப்பு பெரிய குளம், சிறிய குளம்,நவியான் குளம், கரச்சைக் குளம் என அனைத்து நீர் நிலைகளும் அந்தப் பிரதேசத்திற்குள் உள்வாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முஸ்லீங்களின் பல்வேறுபட்ட நிலம் தொடர்பான பிணக்குகள் மற்றும் பூர்வீகமாக ஆண்டுவந்த பிரதேசங்கள் அத்தனையும் உள்வாங்கிய பிரதேச செயலக உருவாக்கத்தினையே முஸ்லிங்கள் எதிர்க்கின்றனர். மாறாக தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்க ஒருபோதும் அவர்கள் விரும்பவில்லை. அதனால் சரியான எல்லை நிர்ணயத்துடன் எல்லைகளை வகுத்து எதிர்காலத்தில் பிணக்குகள் ஏற்படாத வண்ணம் ஒரு நிரந்தர தீர்வினை தரும்படி அரசினை முஸ்லீங்கள் கோரி நிற்கின்றனர்.

60%மாக வாழும் முஸ்லீங்களுக்கு 38% நிலப்பரப்பும் 40%ன தமிழ் மக்களுக்கு 62%மான நிலப்பரப்புமாக பிரிக்கப்பட்டும் ஏற்றுக் கொள்ளுமாறு திணிப்பதும் பிரித்து தருமாறு வற்புறுத்துவதனையும் யாராலும் எற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களின் பிரதேசங்களை அந்த மக்கள் ஆழுவதற்கு ஆசைப்படுவதனை எந்தவொரு முஸ்லீம் மகனும் எதிர்க்கப் போவதில்லை.

மேற்கூறப்பட்ட அத்தனை பூரவீக வளங்களை அப்படியே இன்னுமொரு சமூகத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்க எந்தச் சமூகமும் ஒரு போதும் முன்வரப்போவதில்லை. 

ஒரு பிரதேசத்திற்குரித்தான அடிப்படை நிருவாகத்திற்குரித்தான அம்சங்களை இழந்து விட்டு ஒரு பிரதேச செயலகம் இயங்க முடியாது. 

கல்முனை பிரதேச செயலகத்தின் அத்தனை அடிப்படை அம்சங்களையும் வடக்கு பிரதேச செயலகத்திற்கு தாரைவார்த்துக் கொடுப்பதானது அந்தப் பிரதேசத்து மக்களை உயிரோடு கொழுத்துவதற்கு சமனானதாகும்.


உப பிரதேச செயலகமாக இருந்த காலத்தில் பதவி வழியாக உப பிரதேச செயலாளராக இருக்கவேண்டியவரை பிரதேச செயலாளராக கடமை புரிவதனையும் அதற்காக தனது பதவி முத்திரையினை பாவிப்பதனையும் சட்டத்திற்கு முரணானது எனத் தெரிந்தும் அதற்கு எதிராக எந்த முஸ்லிமாவது போராடினானா?? தடுத்தானா???

பொது நிருவாக அமைச்சு அம்பாரையி்ல் 19 பிரதேச செயலகங்கள் இருப்பதாகவே கேடிட்டுக் காட்டியுள்ள போதிலும் பிரதேச அபிவிருத்திக் குழுக் (DCC) கூட்டத்தினை நடாத்துவதற்கும் பிரதேச அபிவிருத்திக்கான நிதியினைக் கையாள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் சட்டபூர்வமான அதிகாரம் பிரதேச செயலாளருக்கிருந்த போதிலும் அவை உப பிரதேச செயலகத்தில் நடந்த போது யாராவது எதிர்த்தார்களா நீதிமன்றத்தினை நாடினார்களா??? 

காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தினை நடாத்தி காணியினைப் பகிர்தளிக்கும் அதிகாரம் பிரதேச செயலாளருக்கிருக்கின்ற போதிலும் காணி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் உப பிரதேச செயலகத்திலும் நடந்தேறின யாராவது தடுத்து நிறுத்தினரா????

காணி தொடர்பான அதிகாரம் கல்முனைப் பிரதேச செயலாளருக்குரியது அனாலும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் வேண்டுமென்று மூக்கை நுழைத்தார்களா???

50000 முஸ்லீம்களுக்கும் 29 கி.சே.பிரிவுகள் 30000 மக்களைக் கொண்ட பிரதேசத்திற்கும் 29 கி.சே பிரிவுகள் அப்போது கூட யாராவது அலட்டிக் கொண்டார்களா???

இதைவிட மேலாக கல்முனை பிரதேச செயலக கட்டடம் அமைந்திருக்கும் காணி மாநகர சபைக்கு சொந்தமானது. ஆனாலும் தனக்கு இடமில்லாத போதும் உப பிரதேச செயலகத்திற்கு அரச காணியினை ஒதுக்கி நிரந்தரக் கட்டடத்தினை நிர்மாணிக்க உதவினார்களே ஒழிய உபத்திரம் செய்யவில்லை...

40%மான முஸ்லிம்களோடு சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினைப் பிரித்துக் கொடுப்பதற்கும்

அதே போன்று 40% மான முஸ்லீங்களைச் சேர்த்து நிந்தவூர் பிரதேச செயலகத்திலிருந்து காரைதீவு செயலகத்தினை பிரித்துக் கொதுப்பதற்கும் முஸ்லிம் தலைவர்களே முன்னின்று உழைத்தனர். அப்போது யாராவது பிரிவினை பேசினார்களா???

முஸ்லீங்கள் ஒரு போதும் பிரிவினை பேசும் சமூகமல்ல ஒற்றுமையுடன் வாழ நினைக்கும் சமூகம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப்பின்னர் முஸ்லீங்கள் பல வழிகளிலும் மாற்று மதத்தவர்களால் அங்குலம் அங்குலமாக பழிவாங்கப்பட்டும் கூட அமைதியாக ஒண்றிணைந்து வாழவே ஆசைப்படுகின்றனர்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தின் அத்தனை பொருளாதார, சமூக, கலாச்சார விடையங்களை தாங்களே எழுதிக்கொடுத்து விட்டு நடுவீதியில் நாதியற்று எந்தவொரு சமூகமும் நிற்குமானால் அதனைவிட முட்டாள் தனம் எதுவும் இருக்காது. 

ஆகவேதான் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் தொகைக்கேற்ப அத்தனை வளங்களும் பிரிக்கப்படுவதுடன் இனரீதியான பிரதேசசெயலகப் பிரிப்பினையும் நிலத்தொடர்பற்ற பிரதேச எல்லைப் பிரிப்பினையும் முஸ்லீங்கள் எதிர்க்கின்றனர். 

இனங்களுக்கான பாடசாலைகள், இனங்களுக்கான வைத்திய சாலைகள், இனங்களுக்கான காரியாலயங்கள் என கல்முனையில் அதிகரித்து விட்டன. 

இந்த பிரதேச செயலகப் பிரச்சினை ஏதோ ஒரு வகையில் முடிவுற்றதற்றதற்குப் பின்னர் தனியான உள்ளுராட்சி சபைக்கான போராட்டம் தனியான கல்வி வலயத்திற்கான போராட்தம் என இரண்டு சமூகங்களும் முழுமையாகப் பிரிந்து தனிமைப் படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன. 

ஆகவே இனத்தால் வேறுபட்டிருந்தாலும் மொழியால் ஒன்றுபட்டிருக்கும் சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

வடகிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைய வேண்டும் என்றெல்லாம் கோசமிட்டுத் திரியும் அரசியல் தலைமைகளே இனங்களையும் மனங்களையும் பிரித்து விட்டு இணைந்த அரசியல் தீர்வினை எதிர்பார்ப்பது முயற்கொம்பாகவே முடியும்.

மூலம்: சமூகதளம்
Previous Post Next Post