Top News

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியானது



அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை : 13/2019(1)
எனது இலக்கம்: EST-7/UNIFO/06/V
பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும்
கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07.
2019.06.26

அமைச்சுக்களின் செயலாளர்கள்
மாகாண பிரதம செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்

அரச உத்தியோகத்தர்களின் உடை
———————————————
1989.02.01 ஆம் திகதிய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 8/89க்கு மேலதிகமாக அனைத்து அரச
உத்தியோகத்தர்களுக்கு ஏற்புடையதாகும் வகையில் 2019.05.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க
நிருவாகச் சுற்றறிக்கை 13/2019னை திருத்தம் செய்து அதற்குப் பதிலாக இச்சுற்றறிக்கையை
வெளியிடுவதற்கு 2019.06.25 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

02. 2019.04.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2121/1 மற்றும் 2019.05.13 ஆந் திகதி
வெளியிடப்பட்ட இலக்கம் 2123/4 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள
விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளை உமக்கு
கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் உத்தியோகத்தர்கள் கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள் என்பதை
உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

03. அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை தொடர்பில் பின்வரும் ஏற்பாடுகளைப் பின்பற்றுதல்
வேண்டும்.

1.
அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தினுள் தமது அலவலக வளாகத்திற்கு வரும் போது
ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டையும் மேற்சட்டையும் அல்லது தேசிய உடை அணிந்திருத்தல்
வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சாரி அல்லது ஒசரி அல்லது அரச சேவையின்
கெளரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான, கண்ணியமான உடையொன்றை அணிந்திருத்தல்
வேண்டும். எப்போதும் உத்தியோகத்தர்களின் முகம் முழுமையாக (காதுகள் இரண்டையும்
தவிர) திறந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில்
விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குப் பாதிப்பில்லாத உடையாக அது அமைதல் வேண்டும்.
ஏற்கனவே சீருடை அல்லது சீருடைக்கான கொடுப்பனவுகள் பெறும் உத்தியோகத்தர்கள்
தங்களது அனுமதியளிக்கப்பட்ட சீருடையில் கடமையில் ஈடுபடுதல் வேண்டும்.
உதாரணம் : சாரதி, அலுவலக உதவியாளர், கிராம உத்தியோகத்தர் போன்ற பதவிகளை
வகிப்பவர்கள்
III.
அரச சேவையில் பணிபுரிகின்ற பெண் உத்தியோகத்தர்கள் கர்ப்ப காலத்தில் பணிக்குச்
சமுகமளிக்கும் போது வசதியானதும் பொருத்தமானதுமான உடையொன்றை அணிந்து
சேவைக்கு வர முடியும்.
ஏதேனும் சமய மரபுகளுக்கு இணங்க தமது உடைகளை அமைத்துக் கொண்டுள்ள
உத்தியோகத்தர்கள் யாரும் இருப்பின், அவர்கள் மேலே 1 இல் உள்ளவாறான உடையை அணிந்து
அதன் பின்னர் அந்த சமய அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும் உத்தியோகத்தர்களால்
முகத்தை (காதுகள் இரண்டையும் தவிர) தெளிவாக அடையாளம் காணக் கூடிய விதத்திலும்
மேலதிக அணிகலன் ஒன்றைப் பயன்படுத்த முடியும்.

04. சேவை பெறுநராக அரசாங்கத்துக்குச் சொந்தமான வளவுகளுக்குள் நுழையும் போது அல்லது
அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் போது ஒவ்வொரு ஆளும்
தம்மை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய முறையிலான ஆடையொன்றை அணிந்து வர வேண்டும்
என்று ஏற்பாடுகளை விதிப்பதற்கு அனைத்து நிறுவனங்களினதும் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
05.
1989.02.01 ஆம் திகதிய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 8/89 தொடர்ந்தும் செல்லுபடியாகும்.
ஒப்பம்./ ஜே. ஜே. ரத்னசிரி
செயலாளர்
பொது நிருவாக, அனevr ர்த்த முகாமைத்துவ மற்றும்
கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு

1 of 1
ලන චක්‍රලේඛ: 13/2017(I)
මගේ අංකය: EST-7/UNIFO/06/V
රාජ්‍ය පරිපාලන, ආපදා කළමනාකරණ සහ
ග්‍රාමීය ආර්ථික කටයුතු අමාත්‍යාංශය
නිදහස් චතුරස්‍රය
කොළඹ 07.
2019.06.26

අමාත්‍යාංශ ලේකම්වරුන්
පළාත් ප්‍රධාන ලේකම්වරුන්
දෙපාර්තමේන්තු ප්‍රධානීන්

රජයේ නිලධරයන්ගේ ඇඳුම
——————————
1989.02.01 දිනැති රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 8/89ට අමතරව සියලුම රජයේ නිලධරයන්ට අදාළ වන
පරිදි 2012.05.29 දිනැතිව නිකුත් කළ රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 13/2019 සංශෝධනය කරමින් ඒ
වෙනුවට මෙම චක්‍රලේඛය නිකුත් කිරීමට 2017.06.25 දින පැවති අමාත්‍ය මණ්ඩල රැස්වීමේ දී තීරණය
කර ඇත.
02. 2019.04.29 දින නිකුත් කරන ලද අංක 212171 සහ 2019.05.13 දින නිකුත් කරන ලද අංක
2123/4 දරන අති විශේෂ ගැසට් නිවේදනයන්හි සඳහන් කරුණු කෙරෙහි විශේෂ අවධානය යොමු කර
එහි සඳහන් නියෝග ඔබ යටත්තේ පවතින සියලුම ආයතනයන්හි නිලධරයන් විසින් තරයේ පිළිපදින
බවට වග බලාගත යුතුය.
03. රජයේ නිලධරයන්ගේ ඇඳුම් සම්බන්ධයෙන් පහත විධිවිධාන අනුගමනය කළ යුතුය.
රජයේ නිලධරයන් රාජකාරී වේලාව තුළ ස්වකීය කාර්යාල පරිශ්‍රයට පැමිණීමේ දී පිරිමි
නිලධරයන් කලිසම හා කමිසය හෝ ජාතික ඇඳුමින් සැරසී සිටිය යුතු අතර කාන්තා
නිලධාරිනියන් සාරිය, ඔසරිය හෝ රාජ්‍ය සේවයේ ගෞරවය රැකෙන සුදුසු සංවරශීලී
ඇඳුමකින් සැරසී සිටිය යුතු වේ. සැමවිටම නිලධරයෙකුගේ මුහුණ (දෙකන් නොඇතුළත්ව)
සම්පූර්ණයෙන් නිරාවරණව තිබිය යුතු අතර මහජන ආරක්ෂාව සම්බන්ධයෙන් පනවා ඇති
විධිවිධානවලට බාධාවක් නොවන ඇඳුමක් විය යුතුය.
දැනටමත් නිල ඇඳුමක් හෝ නිල ඇඳුම් දීමනා ලබන නිලධරයන් තමාගේ අනුමත නිල
ඇඳුමින් සැරසී රාජකාරියේ යෙදී සිටිය යුතුය.
උදා: රියදුරු, කාර්යාල කාර්ය සහායක, ග්‍රාම නිලධාරී වැනි තනතුරු දරන්නන්
රජයේ සේවයේ නියුතු නිලධාරිනියන් ගම්භනී සමය තුළ සේවයට පැමිණිමේ දී පහසු හා සුදුසු
ඇඳුමකින් සැරසී සේවයට පැමිණිය හැකිය.
කිසියම් ආගමික චාරිත්‍රයකට අනුව තම ඇඳුම සකස් කරගෙන සිටින නිලධරයන් වේ නම්
ඔවුන්ට ඉහත Iහි පරිදි ඇඳුමින් සැරසීමෙන් අනතුරුව එකී ආගමික අනන්‍යතාවය තහවුරු වන
ලෙස හා නිලධරයන්ට සම්පූර්ණ මුහුණ පැහැදිලිව (දෙකන් නොඇතුළත්ව) හඳුනාගත
හැකිවන ලෙස අතිරේක පැළඳුමක් භාවිතා කළ හැකිය.
04. සේවාලාභියෙකු ලෙස රජයට අයත් පරිශ්‍රයකට ඇතුළු වීමේදී හෝ රජය මගින් දෙනු ලබන
සේවාවන් ලබාගැනීමට පැමිණීමේදී සෑම තැනැත්තෙකුම තමන් පැහැදිලිව හඳුනාගත හැකි ආකාරයේ
ඇඳුමකින් සැරසී පැමිණිය යුතු බවට විධිවිධාන පැනවීමට සියලුම ආයතන ප්‍රධානීන් වගබලාගත යුතුය.
05.
1989.02.01 දිනැති රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 8/89 තවදුරටත් වලංගු වේ.

ජේ.ජේ. රත්නසිරි
| ලේකම්
රාජ්‍ය පරිපාලන, ආපදා කළමනාකරණ සහ
ග්‍රාමීය ආර්ථික කටයුතු අමාත්‍යාංශය

Post a Comment

Previous Post Next Post