Top News

நான் எடுத்த முஸ்லிம் வாக்கை கூட, ஹக்கீம் எடுக்கவில்லை : SB வீடியோ



நாட்டில் தற்பொழுது முஸ்லிம்கள் சார்பாக எழுந்துள்ள பிரச்சனைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஹக்கீம் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களை ஏனைய அரசியல் கட்சிகளிடம் இருந்து வேறாக பிரித்து தனது அரசியலினை இஸ்தீர படுத்திக்கொள்வதற்கான முயற்சியிலேயே கச்சிதமாக காய்களை நகர்த்தி கொண்டிருக்கின்றார். இந்த செயற்பாட்டினையே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலும் திரை மறையில் இருந்து ஹக்கீமினை செயற்படுத்திக்கொண்டிருக்கின்றார்.

ஆனால் முஸ்லிம் காங்கிரசினை இஸ்தாபித்த மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரஃப், ஹக்கீமை போன்று இந்த நாட்டு முஸ்லிம்களை ஏனைய சமூகத்திடமிருந்தோ அல்லது பெரும்பான்மை கட்சிகளிடமிருந்தோ தனது சுய அரசியலுக்காக பிரித்தெடுக்கும் முயற்சியில் ஒரு பொழுதும் செயற்பட்டதில்லை. மறைந்த அஸ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனிக்கட்சியினை உருவாக்கியது கூட ஜே.ஆரினுடைய அரசாங்கத்தில் 1988ம் ஆண்டு விடுதலை புலிகள் மற்றும் தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் இந்த நாட்டு முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இரவோடிரவாக வடகிழக்கு இணைக்கப்படதிலாகும்.

அன்று ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஜே.ஆரினுடைய சர்வதிகாரத்தினை பார்த்தவாறு வாய் மூடி பொம்மைகளாகவே இருந்தார்கள். குறித்த திட்டமிடப்பட்ட துர்ப்பாக்கிய நிலையினை தூர நோக்குனோடு பார்த்த மறைந்த அஸ்ரஃப் முஸ்லிம்களுக்காக தனியான அரசியல் கட்சியின் தேவைப்பாட்டை உணர்ந்தே முஸ்லிம்களுக்கான தனிய முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியினை இஸ்தாபித்தார்.

ஆனால் ஹக்கீம் தற்பொழுது தனது சுயநல அரசியலுக்காகவும், ரணிலினை பாதுகாப்பதற்காகவும் அஸ்ரஃப் உருவாக்கிய கட்சியினை பயன்படுத்தி இந்த நாட்டு முஸ்லிம்களை ஏனைய கட்சிகலிடமிருந்தும் ஏனைய மூகத்திடமிருந்தும் பிரித்தெடுக்கும் செயற்பாட்டில் மிக கச்சிதமாக செயற்பட்டு வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க ஹிரு தொலைக்காட்சியில் இடம் பெற்ற சலகுண சிங்கள அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த எஸ்.பி.திசாநாயக்க.. அன்று பதின் மூன்றாவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட வேலையில் ஜே.ஆரை பார்த்தோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியிடமோ அக்கட்சியில் அங்கம் வகித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வசனம் கூட கதைக்கவில்லை. அதிலும் முக்கியமாக சிங்களவர்களின் தூண்டுதலாலேயே அந்த இடத்தில் தற்காலியமாக இணைக்கப்பட்டு, வடகிழக்கில் வாழுகின்ற மூவின மக்களினதும் விருப்பத்தினை அறிந்து கொள்ளும் பொருட்டு சர்வசனவாக்கெடுப்பாவது நடாத்தப்பட வேண்டும் என்ற முடிவு கூட எட்டப்பட்டத்து. அந்த நேரத்தில் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் தொட்டும் அடிப்படை உரிமைகளை நினைத்தும் பெரும் அச்சத்துக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் என்பதனை எவறும் மறுக்க முடியாது.

இந்த நிலையில்தான் அஸ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேவைப்பட்டினை உணர்ந்து செயற்பட தொடங்கினார். ஆனால் அவர் முதலாவது பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு முஸ்லிம்களை பெரும்பான்மை சமூகத்திடமிருந்தோ அல்லது ஏனைய கட்சிகளிடமிருந்தோ முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனிப்பெயரினை இனத்தால் பிரித்து தூர மாக்கி விடக்கூடாது என்பதனை உணர்ந்தவராக சகல சமூகத்தினரையும், சக கட்சிகளையும் உள்வாங்கும் தூர நோக்கு சிந்தனையோடு தேசிய ஐக்கிய முன்னணி அல்லது ஜாதிக்க சமக்கி சந்தானே.( NUA) எனும் கட்சியினை ஆரம்பித்தார். அந்த கட்சிக்குள்ளேயே முஸ்லிம் காங்கிரசனை உள்ளெடுத்து இலங்கையில் உள்ள சகல இனத்னறையும் ஒருக்கிணைத்த அரசியலை மேற்கொள்வதே அவருடைய அருமையான திட்டமாக இருந்தது. அவருடைய மறைவிற்கு பின்னர் அவருடைய பாரியார் அக்கட்சியிலேயே போட்டியிட்டார்.

அவருக்கு பின்னர் முஸ்லிம் காங்கிரசனை கையில் எடுத்த ஹக்கீம் இந்த நாட்டு முஸ்லிம்களை ஏனைய சமூகத்திடமிருந்து பிரித்து தனது அரசியலினை பாதுகாத்து வருகின்றார். ஆனால் அவரால் இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பத்து விகித வாக்குகளை கூட பெற்றுகொள்ள முடியாத நிலையே உள்ளது. கண்டியில் என்னுடன் போட்டியிட்ட ஹக்கீம் நான் பெற்றுக்கொண்ட முஸ்லிம் வாக்குகளில் பத்து விகிதம் கூட அவரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனதை வைத்து பார்க்கும் பொழுது அவருக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் தற்போதைய செல்வாக்கு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க.

Post a Comment

Previous Post Next Post