Top News

PSC முன்னிலையில், பல கேள்விக்கு பதில் வழங்கிய ஹிஸ்புல்லா (விபரம்)



கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். 

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்ட ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டார், 

அவரது சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு:

கேள்வி:- உங்­களின் அர­சியல் பயணம் குறித்து கூறுங்கள்?

பதில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக எனது அர­சியல் வாழ்க்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1994 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரி­வானேன். பின்னர் பல வெற்றி, தோல்­விகள் எனக்கு அமைந்­தன. பிரதி அமைச்­ச­ரா­கவும், இரா­ஜாங்க அமைச்­ச­ராகவும் கட­மை­யாற்­றி­யுள்ளேன். பின்னர் ஜன­வரி நான்காம் திகதி இரா­ஜி­னாமா செய்­யப்­பட்டு கிழக்கு ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டேன். 

கேள்வி:- காத்­தான்­குடி அடிப்­ப­டை­வாத பகுதி என நம்­பு­கி­றீர்­களா?

பதில் :- இல்லை 

கேள்வி :- காத்­தான்­கு­டியில் எத்­தனை மொழிகள் ?

பதில் : மூன்று மொழிகள் 

கேள்வி :-அரபு மொழி ஏன் அங்கு? 

பதில் :இங்கு மூன்று மொழிகள் உள்­ளன. அரபிக் இங்கு இல்லை. ஆனால் சுற்­றுலா துறைக்­காக அர­பிகள் வரு­வதால் எமக்கு அவர்­களைக் கவர வேண்டும். அதற்­காக நாம் இதனை செய்­ய­வேண்டும். இது சட்ட விரோ­தமோ அர­சியல் அமைப்­பிற்கு மாறா­னதோ என நினைக்க முடி­யாது. 

கேள்வி :- அர­பிகள் ஏன் அரபி எழுத்தை பார்த்து வரு­கின்­றனர். வேறு நாடு­களில் எமக்கு அப்­படி இல்­லையே?

பதில் :- அப்­படி அல்ல, நாம் சுற்­றுலாத் துறையை கவர இவற்றை செய்­கின்றோம். கிழக்கு மாகாண சபையில் அங்­கீ­காரம் பெற்றோம். 

கேள்வி : -காத்தான்­கு­டியில் ஈச்சம் மரம் நட என்ன காரணம்? 

பதில் :- உண்­மையில் காத்­தான்­கு­டியில் மரம் நட சில தீர்­மானம் எடுத்தேன். பசி­யா­லைக்கு சென்ற போது வேறு சில மரம் நட தீர்­மானம் எடுத்தோம். ஆனால் எமது பிர­தேச காலத்­திற்கு ஏற்ப இவை சரி­வ­ர­வில்லை ஆகவே ஈச்சம் நடலாம் என தீர்­மானம் எடுத்தோம். எமது பிர­தேச வெப்­பத்­துக்கு அமைய தீர்­மானம் எடுத்தோம்.

கேள்வி: ஏன் பனை­மரம் தெரி­வு­செய்­ய­வில்லை? 

பதில் :- ஈச்சம் மரம் தெரிவு செய்தோம். பனை மரமும் நடலாம் 

கேள்வி: இதனை அகற்­று­வ­தற்கு தீர்ப்பு வழங்­கிய நீதி­ப­தியை மாற்ற நட­வ­டிக்கை எடுத்­த­தாக கூற­ப்ப­டு­கின்­றதே? 

பதில்:-இது குறித்து வழக்கு இருப்­பதால் நான் கருத்து கூற­வில்லை 

கேள்வி :- ஹிரா நிறு­வனம் பற்றி கூறுங்­களேன் ?

கேள்வி :-எவ்­வ­ளவு நிதி வந்­தது

பதில் :- முன்­னூற்று ஐம்­பது மில்­லியன் 

கேள்வி: கிழக்கு பல்­க­லைக்­க­ழக்கம் ?

பதில்:- நாம் எந்த இன மத அடிப்­ப­டையில் பார்த்தும் எடுக்­க­வில்லை. ஆனால் பெரும்­பான்மை முஸ்லிம் மாண­வர்கள் வந்­தனர்.

கேள்வி: மகா­வலி அபி­வி­ருத்தி இடம் ஒன்­றினை நீங்கள் பெற்­றீர்கள் ஏன்?

பதில்:- ஆம், தற்­கா­லி­க­மாக நிறு­வனம் ஒன்றே இருந்­தது, ஆகவே நிரந்­த­ர­மாக ஹீரா நிறு­வ­னத்தை அமைக்க இதனை கோரினோம். அதன் பின்னர் உயர் கல்வி நிறு­வ­ன­மாக நாம் கோரிக்கை அறிக்கை ஒன்­றினை உயர் கல்வி அமைச்­சுக்கு விடுத்தோம். இதில் சில முன்­மொ­ழி­வு­களும் இருந்­தன. ஆகவே மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பெயரில் ஆவ­ணங்கள் தயா­ரித்து மகா­வலி நிறு­வன நிலத்தை பெற்­றுக்­கொண்டோம். இந்த கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு அர­சினால் அனு­மதி கிடைக்­கப்­பட்­டது. 35 ஏக்கர் இருந்­தது. 

கேள்வி:- நீங்கள் வகாப் வாதத்தை ஆத­ரி­கின்­றீர்­களா ?

பதில் :- இல்லை, ஒரு­போதும் ஆத­ரிக்­க­வில்லை.

கேள்வி :- கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் ஷரிஆ பல்­க­லைக்­க­ழ­கமா?

பதில்:- அவ்­வாறு ஒன்றும் இல்லை, நான் இதனை அர­சாங்­கத்­துடன் இணைந்து முன்­னெ­டுக்க சகல விதத்­திலும் தயா­ராக உள்ளேன். ஆனால் ஊட­கங்கள் இதனை தவ­று­த­லாக விமர்­சித்து வரு­கின்­றன. இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் நிர்­வாக அதி­கா­ரிகள் சிங்­க­ள­வர்கள். அவர்­களின் பெயர்­களை நான் கூற விரும்­ப­வில்லை. சிலர் தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தை விரும்­ப­வில்லை. சைட்டம் மூடப்­பட்­டது. அது­போன்று எங்­க­ளையும் இலக்கு வைக்­கின்­றனர். நான் எந்த இணக்­கத்­துக்கும் தயா­ராக உள்ளேன். இது எமது அப்­பாவி மக்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. நான் ஒரு சமூக சேவை­யாக இதனை பார்க்­கிறேன். எமது மக்­க­ளுக்­காக நான் எதையும் செய்ய தயா­ராக உள்ளேன்.

கேள்வி :- ஹிரா மூலம் எத்­தனை பள்­ளி­வாசல் உரு­வாக்­கப்­பட்­டது

பதில் :- நிறைய அமைக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி :- சவூதி நிதி வரு­கின்­றது, அவர்கள் சூபிக்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வது இல்­லையே ? 

பதில் :- அவர்­க­ளுக்கு பிடிக்­காது. ஆனால் நிதி எனக்கு வரு­கின்­றது. எனக்கு பிரி­வினை முக்­கியம் இல்லை. மக்­களின் சேவ­க­னாக நான் சேவை செய்­கின்றேன். தமிழ் மக்­க­ளுக்கும் உதவி செய்­துள்ளேன். 

கேள்வி :- அப்துல் ராசிக் யாரென்று தெரி­யுமா

பதில் :ஆம் 

கேள்வி : அவ­ருடன் உங்­களின் பழக்கம் எப்­படி? 

பதில் : தொலை­பே­சியில் பேசி­யுள்ளோம். இந்த பிரச்­சி­னை­களின் பின்னர் பேசினார். இரு தினங்­க­ளுக்கு முன்­னரும் பேசினேன்.

கேள்வி :- அவ­ருடன் உங்­க­ளுக்கு நெருக்­க­மான நட்பு உள்­ளதா?

பதில் :-அப்­படி என்று இல்லை, இந்த பிரச்சினைக்கு பின்னர் பேசினோம். 

கேள்வி :அவர் ஐ.எஸ். கொடிகளுடன் கிழக்கில் செயற்பட்டாரா?

பதில் :அப்படி ஒன்றும் எனக்கு தெரியாது 

அவர் ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ளதாக இங்கு வந்த இருவர் கூறினார்கள்? 

பதில் :- அவற்றை நான் கேட்டதில்லை, ஆனால் தௌவ்ஹித் என்ற பெயருக்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒருவர் பயங்கரவாதி என்றால் அவரை விசாரிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதி என கூற முடியாது. ராசிக் ஐ.எஸ். என்று எனக்கு தெரியாது.

கேள்வி :- காத்தான்குடியை அரபு மயமாக்கியது நீங்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது, இதனை இல்லை என்கிறீர்களா?

பதில்: இது அரபு மயம் அல்ல. எமது மக்களின் அடையாளம் அவ்வாறு உள்ளதால் அதனுடன் இணைந்து செல்லும் வகையில் செய்தோம். கட்டடக்கலை தானே? யாழில் இந்து கலாசார முறைமை உள்ளது, தெற்கில் பெளத்த முறைமை உள்ளது. அது போன்று தான். 

கேள்வி:- சஹ்ரான் கட்டளைகளை விதித்த காலத்தில் கூட உங்களுக்கு அவரின் நிலைமை புரியவில்லையா?

பதில்:- அவர் அடிப்படைவாதிதான். ஆரம்பத்தில் இருந்து அவர் அடிப்படைவாதி என்று தெரியும். ஆனால் அவர் பயங்கரவாதி என எனக்கு தெரியாது.
Previous Post Next Post