பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தேர்தலில் தனியாக போட்டியிட்டு முடியுமானால் 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பகிரங்க சவால் விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
உதய கம்மம்பிலவின் கட்சிக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? அவருடைய கட்சியில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்? என மரிக்கார் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
உதய கம்மம்பில எம்.பி. மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை முன்னிலைப்படுத்தி அரசியல் ஈடுபட்டு கரைசேறும் ஒருவராகவே காணப்படுகின்றார். முடியுமானால், அவர் தனியாக போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகளை எடுத்துக் காட்டட்டும். நான் எனது காதை வெட்டி கையில் தருகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment