Top News

11ஆம் திகதி முஸ்லிம் தலைவர்கள் கூடுகின்றனர்! தீர்மானங்கள் எடுக்கப்படலாம்!

அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஏ.எச்.பௌசி தெரிவித்தாவது,

நாட்டில் அசாதாரண நிலைமைகளை கட்டப்படுத்தி அமைதியான நிலைமைகள் ஏற்படுத்தவதற்காக இக்கட்டான நிலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின் அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தார்கள்.

இந்நிலையில் தற்போதைய அரசியல் நிலைமைகள், முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் நெருக்கடியான நிலைமைகள், கல்முனை வடக்கு உப பிரிவைத் தரமுயர்த்துதல், மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதேநேரம், முதற்கட்டமாக ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து எமது சமுகம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்திருந்தோம். மீண்டும் அத்தலைவர்களை நேரில் சந்திப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். 

அதற்கான நேரஒதுக்கீடுகள் தற்போது வரையில் உறுதியாகவில்லை. எவ்வாறாயினும் அடுத்த வார இறுதிக்குள் சந்திப்புக்களைச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் அதிகாரங்களை கொண்ட பதவிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரி அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதமிருந்ததையடுத்து அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலகியிருந்ததோடு மட்டுமல்லாது பாராளுமன்றத்தில் உள்ள 20முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post