Top News

சஹ்ரானையும், கல்முனை வைத்தியசாலையும் தொடர்புபடுத்திய 18 பேருக்கு வலைவீச்சு

ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் பெயரை கல்­முனை ஆதா­ர­ வைத்­தி­ய­சா­லை­யுடன் இணைத்து பொய் ­செய்தி வெளி­யிட்­டார்­கள்­ என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் சுமார் 18 பேரைத் ­தேடி பொலிஸார் வலை­வி­ரித்துள்ளனர். 

இன­வா­தத்­தையும் இன­ மு­ரண்­பாட்­டையும் தோற்­று­விக்கும் நோக்­கிலும் வைத்­தி­ய­சா­லைக்கு அவ­தூறு ஏற்­ப­டுத்தும் விதத்­திலும் நடக்­காத ஒரு சம்­ப­வத்தை நடந்­த­தாகக் கூறி போலிச்­செய்­தியை வெளி­யிட்­ட­தாக கல்­முனை ஆதா­ர­ வைத்­தி­ய­சாலை நிரு­வாகம் கல்­முனை பொலிஸ் நிலை­யத்­திலும் சி.ஐ.டி.யின­ரி­டமும் எழுத்­து­மூல முறைப்­பாட்டைச் சமர்ப்­பித்­துள்­ளது.

மேலும் சுகா­தார அமைச்­சுக்கும் தாதி­ய­உத்­தி­யோ­கத்­தர்கள் சங்­கத்­துக்கும் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய இரு­ த­ரப்­பி­னரும் சம்­பந்­தப்­பட்ட சந்­தே­க­ந­பர்­க­ளைத் ­தேடி வலை­வி­ரித்­துள்­ளனர். இன்றோ நாளையோ அவர்கள் கைது­ செய்­யப்­ப­ட­லா­மெ­னத்­ தெ­ரி­ய­வ­ரு­கி­றது.

அவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் வீதியில் இறங்­க­வி­ருப்­ப­தாக ஊழி­யர்கள் கூறு­கின்ற அதே­வேளை தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விப்போம் என நிரு­வா­கத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

சம்­பவம் பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

கல்முனை ஆதா­ர­ வைத்­தி­ய­சா­லையில் முஸ்லிம் பெண்­ணொ­ரு­வ­ருக்கு குழந்தை பிறந்­த­தா­கவும் அக்­கு­ழந்தை சஹ்ரான் போலி­ருப்­ப­தாக தாதி­ய­ உத்­தி­யோ­கத்தர் சொன்­ன­தா­கவும் அவ­ருக்கு குழந்­தையின் தந்தை அடித்­த­தா­கவும் இத­னை­ய­றிந்து வைத்­தி­ய­சாலை நிரு­வாகம் குறித்த தாதிய உத்­தி­யோ­கத்­தரை வேலை­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யுள்­ள­தா­கவும் இணை­யத்­த­ளங்­க­ளிலும் சமூ­க ­வ­லைத்­த­ளங்­க­ளிலும் செய்­திகள் வெளி­வந்­தன.

அப்­படி அங்கு ஒரு சம்­பவம் நடக்­க­வில்­லை­யெ­னவும் அப்­படி எந்தத் தாதி­ய­உத்­தி­யோ­கத்­தரை இடை­நி­றுத்­தவில்­லை­யெ­னவும் தெரி­வித்த வைத்­தி­ய­சாலை நிரு­வாகம், வேண்­டு­மென்றே இன­வாத நோக்கில் அவ­தூறு ஏற்­ப­டுத்தும் நோக்கில் வெளி­யி­டப்­பட்ட அந்­தச்­ செய்தி பொய்­யா­னது எனவும் போலி­யா­னது எனவும் கூறி முறைப்­பாட்டைத் தொடர்ந்­துள்­ளது.

இந்தப் போலிச்செய்தியை வெளியிட்ட வர்கள், பரப்பியவர்கள் என்ற போர்வையில் சுமார் 18 பேரின் பெயர்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பயங்கரவாதத்துடன் தொடர் புடைய போலி இணைய சமூக வலைத்தள முறைப்பாட்டுப் பிரிவுக்கும் முறையிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித் துள்ளார்கள்.

Post a Comment

Previous Post Next Post