விரைவில் நடக்கவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தை அரவனைக்கும் ஒருவருக்கே நாம் எமது கட்சி ஆதரவாளிப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
கந்தளாவில் நேற்று (21) மாலை இடம் பெற்ற கட்சி முக்கியஸ்தர்களூடனான சந்திப்பின்பதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
கடந்த கால மஹிந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை சர்வாதிகார ஆட்சியைப் போன்று அடக்கி ஒடுக்கி சிதறடிக்கப்பட வைத்தார்கள். சுயாதீன குழுக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டு 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது
இதனால் தான் சிறுபான்மை கட்சிகள் ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்தது வடகிழக்கு யுத்ததுதின் பின் முப்பது வருட காலங்களின் பின்பு தமிழ்போராளிகள் கைது செய்யப்பட்டார்கள், மலையக மக்களின் உரிமைகளின் மறுக்கப்பட்டது 150 வருடத்துக்கும் மேலாக நாட்டின் அநநியச் செலவாணிக்கு பங்கு கொடுத்தார்கள்
போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெறவே ஆட்சிமாற்றத்தை விரும்பினோம் நாங்கள் அனைவரும் ஓரணியில் நின்று சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க வேண்டும்
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ரெலோ போன்ற கட்சிகள் மலையக மக்கள் ஊடான சமூகத்தில் திகாம்பரம் , மனோ,ராதா போன்றவர்களின் சிறூபான்மைகளின் ஒற்றுமை போன்று முஸ்லிம் சமூகம் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கினால் எமது தலைவர் றிசாத் பூரண ஒத்துழைப்பு வழங்குவார் என அன்றே கூறினார்.
இதன் உருவாக்கத்தில் கட்சியின் பெயரோ,சின்னமோ தலைமைத்துவோ தனிப்பட்ட வகையில் தேவையில்லை சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு ஒற்றுமையே தேவை
ஜனாதிபதி சுதந்திர சதுக்கத்தில் வைத்து பல பிரகடனங்களை செய்தார் இன்று மீண்டும் தேர்தலில் குதிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு சொல்கிறார் நீதிமன்றத்தை நாடுகிறார்.
எது எப்படியோ முஸ்லிம் சமூகத்தை பிரித்து விடக்கூடாது இன நல்லுறவை வலுப்படுத்தக்கூடிய ஜனாதிபதியை வருகின்ற தேர்தலில் தெரிவு செய்வோம் அது ரணில் விக்ரமசிங்கவாகவோ, கருவாகவோ, சஜித்தாகவோ, கோட்டபாயவோ, மஹிந்தவாகவோ இருக்கலாம் யாராக இருந்தாலும் சரி எமது சமூகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பையூம் உறுதிப்படுத்தக்கூடிய ஓரணியில் நின்று முடிவெடுக்கக் கூடிய ஜனாதிபதியை நாம் தெரிவு செய்வோம் என்றார்.
ஹஸ்பர் ஏ ஹலீம்
Post a Comment