இலங்கை முஸ்லிம்களின் நிலை தற்போது சென்ற காலங்களைவிட மாற்றத்தை நோக்கிச் செல்வதையும், இலங்கை முஸ்லிம்கள் பல்வேறான திசைகளிலும் இனவாதாத தாக்குதல்களாலும் நசுக்கப்பட்டு வருகின்றோம். இவற்றை ஊடகங்களில் மூலம் வெளிப்படுத்த மாற்றுமத ஊடகங்கள் சரியான இடத்தை எமக்கு தருவதில்லை இதனால் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றோம்.
குறிப்பாக எமது இனிய இஸ்லாம் மார்க்கம் கூட சரியான முறையில் ஏனைய மதங்களுக்கு செல்லவில்லை. அதானால் அவர்கள் எம்மை சந்தேக பார்வையிடையுடன் நோக்குகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் பெரும்பானை இனத்தரின் ஊடக பலமே.
ஆகவே எமது சமூகத்தில் காணப்படும் நசுக்குவாரங்களையும், எமது சமூகத்திற்குள் நடக்கும் அநீதிகளையும் (உண்மைகளை) வெளி உலகிற்கு வெளிப்படுத்த வேண்டியது எம் அனைவரும் கடமையாகும்.ஏலவே உள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பொறுப்பும் கூட. அதுமாத்திரமின்றி இளம் ஊடகவியலாளர்கள் பகுதிநேரமாக எமது சமூகத்தின் குரலை வெளிப்படுத்த தைரியத்துடன் இனவாதமற்ற கருத்துக்களுடன் வெளி உலகத்திற்கு கொண்டுவருதல் அவசியம்.
ஆகவே, ஒவ்வொரு பிரதேசங்களிலும், ஒவ்வொரு ஊர்களிலும் இளம் ஊடகவியலாளருக்கு ஏலவே உள்ள ஊடகவியலாளர் வழிகாட்டலுடன் ஊடக மையங்களையும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.
எனவே, எமது சிலோன் முஸ்லிம் ஊடக நிறுவனம் எதிர்வரும் காலங்களிலும் ஊடகவியலாளர்களுக்கான அல்லது ஊடக ஆர்வலர்களை இணைத்து வீறு நடைபோடவுள்ளது. ஆக ஊடக ஆர்வலர்கள் உங்களது விபரங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.
ஈமெயில்: ceylonmuslim24@gmail.com
Contact with Facebook > https://www.facebook.com/ceylonmuslim/
Post a Comment