நேரம் ஆறு நாற்பத்து ஐந்து.
தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்..
டாக்டர் ஷாபிக்கு எதிராக குருணாகலை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதே நீதவான் வழக்கை தலைமை தாங்கினார்.
வழமைப்போலவே இன்றும் சில பொதுமக்களுடன் குருணாகலை நகரசபையை சேர்ந்த சில சிற்றூழியர்கள் டாக்டர் ஷாபிக்கு எதிரான சுலோக அட்டைகளுடன் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கூக்குரலிட்ட அவர்களின் கோஷங்கள் நீதித்துறைக்கும், குருணாகலை போலீசாருக்கும் ஆதரவாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார, நமது சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் ஆகியோருடன் சட்டத்தரணிகளான பிரேமரத்ன தென்னகோன், ஷப்ராஸ் ஹம்சா, பசன் வீரசிங்க, ஷைனாஸ் முஹம்மத், மகேஷ் பேருகொட, ரனீரா சேனாதீர ஆகியோர் டாக்டர் ஷாபிக்கு ஆதரவாக ஆஜராகினர்.
இன்று முறையே, டாக்டர் ஷாபியின் துணைவி, இளம் பத்திரிகையாளர்களின் சங்கம், குற்றப்புலனாய்வு திணைக்களம் (டி.ஐ.ஜி ஊடாக) ஆகியோர் இணைந்த நிலையில் நீதிமன்ற நீதவானுக்கு எதிராக நீதித்துறை சேவை ஆணையத்தில் மூன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
நீதிமன்றத்துக்கு அதிக எண்ணிக்கையிலான தாய்மார்கள் பலவந்தமாக ஊர்வலம் வந்தனர்.
சில மத குருமார்களும் பொது மக்களும் நீதிமன்றில் நிறைந்திருந்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோனுடன் சுமார் பதினைந்து சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட மக்கள் என்றழைக்கப்பட்ட முறைப்பாடுதாரிகளின் சார்பில் ஆஜராகினர்.
வாதப்பிரதிவாதங்கள் நடந்து முடிய சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் எடுத்தன.
இறுதியாக மாலை ஐந்து நாற்பத்து ஐந்துக்கு தீர்ப்பளிப்பதாக நீதிபதி கூறினார்.
இப்பொழுது நேரம் ஆறு நாற்பத்து ஐந்து.
தீர்ப்புக்காக மக்கள் இன்னமும் காத்திருக்கிறார்கள்.
நான் கேட்டேன். "டாக்டர் ஷாபிக்கு பிணை கிடைக்குமா?"
"டாக்டர் ஷாபியின் பிணை மறுப்புக்கு வலுவான காரணங்கள் எதுவுமே இல்லை. ஆகவே, பிணை கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியும். . மாலை ஐந்து நாற்பத்து ஐந்துக்கு தீர்ப்பு வழங்கப்படும். நல்லதையே எதிர்பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்." என்றார்
சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன்.
Post a Comment