Top News

பொத்துவில் அபிவிருதிக்கு நிதிகளை ஒதுக்கிய ரிஷாத் பதியுதீன்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உணர்வு கொண்ட பெரும் முயற்சியினால், பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராம சேவகர்/வட்டார பிரிவுகளுக்கான 2018ம் ஆண்டு காலப் பகுதியில் அடையாளப் படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளது.

அவைகள் பின்வருமாறு ; 

01) பொத்துவில்-20
ரூபாய் 1250000 தொகை கொண்டு, ஹிதாயா புரம் மையவாடிக்கான சுற்றுமதில் அமைக்கப் பட்டுள்ளது.

02) பொத்துவில்-17.
ரூபாய்- 1150000 தொகை கொண்டு,
மக்களுக்கான பொதுக் கிணறு அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது.

03) பொத்துவில்-08.
ரூபாய் 100,0000 தொகை கொண்டு, நூராணியா பள்ளிவாசலுக்கு சுற்றுமதில் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது.

04) பொத்துவில்-04
ரூபாய் 100,0000 தொகை கொண்டு சபீலுர் றஷாட் அறபுக் கல்லூரிக்கான நுழைவாயில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

05) பொத்துவில்-பசறிச்சேனை,
ரூபாய் 100,0000 தொகை கொண்டு திருத்த வேலைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

06) பொத்துவில்- விக்டர் ஸ்டேட்.
ரூபாய் 100,0000 தொகை கொண்டு,
9th Gross கொங்கிறீட் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

07) பொத்துவில்-03
ரூபாய் 100,0000 தொகை கொண்டு,
மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் திருத்த வேலைகளுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

08) பொத்துவில்-17
3ம் கட்டை, 
ரூபாய் 950,000 தொகை கொண்டு
குடி நீருக்காக பொதுக் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

09) பொத்துவில்-17
4ம் கட்டை,
ரூபாய் 950,000 தொகை கொண்டு, குடிநீருக்காக பொதுக் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

10) பொத்துவில்-27
ரூபாய் 500,000 தொகை கொண்டு மீரா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது.

11) பொத்துவில்-06
ரூபாய் 350,000 தொகை கொண்டு, அல்-மஸ்ஜிதுல் முனவ்வறா பள்ளிவாசலுக்கான புதிய நீர்தாங்கி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

12) பொத்துவில் ஹிஜ்றாபுர 50 வீட்டுத் திட்ட அபிவிருத்தி,

13) பொத்துவில் ஹிஜ்ராபுர 50 வீட்டுத் திட்ட உள்ளக வீதிகள் அமைத்து, மின்சாரம் கொடுத்தமை.

14) பொத்துவில் ஹிஜ்ராபுர ஆரம்ப பாடசாலைக்கு 2மாடிக் கட்டிட வகுப்பறைகள் மற்றும் சுற்று வேலி அமைத்துக் கொடுத்தமை.

15) பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களுக்கு 47 இலட்சம் ரூபாய்களுக்கு வாழ்வாதார உதவிகள் அளிக்கப் பட்டுள்ளது.

16) உள்ளக கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளுக்கா 44 இலட்சம் ரூபாய் வர்த்தக கைத்தொழில் அமைச்சினால் 2017/18 இல் ஒதுக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.

மேலே குறிப்பிட்ட அபிவிருத்திப் பணிகள் எமது கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டு மூலமாக, 2018க்கான நிதி ஒதுக்கப் பட்டமை குறிபிடத் தக்கது.

இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை 
எமது கட்சியின் வட்டார அமைப்பாளர்கள், கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் மற்றும் கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரான SSP-அப்துல் மஜீட் அவர்களும் வழங்கி உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் 2019 ம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள் நிறைவு பெற்றதும் அறியத் தருகின்றேன்.
இது 2018 இன் 7மாத காலத்திற்கான அபிவிருதி நிதி ஒதுக்கீடுகளாகும்.

ஜுனைடீன் மான்குட்டி,
உயர்பீட உறுப்பினர்,
மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர்,
அகில இலங்கை 
மக்கள் காங்கிரஸ்.
கல்முனை.
23/07/2019.

Post a Comment

Previous Post Next Post