அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்கு உட்பட்ட மாயக்கல்லிமலை மலையடியில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த மடாலய நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு கோரும் மகஜர் ஒன்றை இறக்காமம் பிரதேச சபையிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்ச்சைiயில் கிடந்து வந்த இறக்காமம் மாயக்கல்லி மலையடிவார பௌத்த மடாலய நிர்மாணம் மீண்டும் ஆரம்பாமனதையடுத்தே இந்த மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
]இக்கட்டட நிர்மாணத்துக்கு அனுமதி வழங்கியது யார் என்பதனை இறக்காமம் பிரதேச சபை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என்பதுடன் இதன் நிர்மாணப்பணியை உடன் தடை செய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த இருவருடங்களுக்கு முன்பு அங்கு திடீரென வைக்கப்பட்ட பௌத்த புத்தர் சிலையொன்றின் காரணமாக ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின்னர் தமன பொலிஸாரினால் அம்பாறை நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவின் பேரில் இப்பிரதேசத்துக்கு எவரும் செல்லக் கூடாது என தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment