சஜித் தலைமை பதவிக்கு மிகவும் தகுதியானவர் : தயா கமகே

NEWS
0
அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமை பதவிக்கு மிகவும் தகுதியானவர் என ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.

சஜித் மிகவும் திறமையான ஒரு அமைச்சர் எனவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதாகவும் அமைச்சர் தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தமது கட்சியில் தலைமைத்துவ பதவிக்கு தகுதியுடைய பலர் இருப்பதாகவும் மொட்டு கட்சியில் ராஜபக்ஷ குடும்பத்தினரை தவிர்ந்த வேறெவரும் தலைமைத்துவ பதவிக்கு தகுதியற்றவர்கள் எனவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top