முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இதயவியல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment