ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு வழங்கப்படும் கோட்டாவை அதிகரிக்க சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாண்டு ஹஜ் யாத்திரைக்கான கோட்டாவை 500 பேரினால் அதிகரிக்க சவுதி அரேபிய அரசு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான இலங்கையர்களின் எண்ணிக்கை 4000 பேராக உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. ஹஜ் யாத்திரைக்காக இலங்கை முஸ்லிம்களுக்கு இவ்வாறான வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு சவுதி அரசாங்கத்திற்கு முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் நன்றி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக இவ்வாண்டு ஹஜ் யாத்திரை செல்ல இருந்த 100 யாத்திரிகளின் பெயர் பட்டியலில் இருந்த நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹஜ் யாத்திரைக்கான முதலாவது குழு எதிர்வரும் 15 ஆம் திகதி சவுதி நோக்கி பயணிக்க உள்ளனர்.
Post a Comment