கலாபூஷணம் மீரா
சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலர் இருக்கின்றனர்.இவர்களுள் சிறப்புப் பெற்ற ஒருவராக நிலார் என் காசீம் விளங்குகின்றார். இவர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவு பணிப்பாளராகவும்; இருக்கின்றார்.
களனி பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் சிங்கள கலை இலக்கியவாதிகள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெறுவதற்கு இவரது சிங்களமொழி ஆளுமை இவரை மேலோங்க வைத்ததெனலாம். சிங்கள கலை இலக்கிய வட்டத்தில் பண்டிதர் அமரதேவா போன்ற பெரியார்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
தென்னிலங்கையைச் சேர்ந்த இவர் முஸ்லிம் சமூகம் தொடர்பில் அவ்வப்போது குரலெழுப்பிக் கொண்டிருப்பதை அவதானிக்கும் போது எமக்கு ஆறதல் அளிக்கின்றது.அண்மையில் கூட கல்வியியதாளர்கள் புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் பிரபல்யமிக்க துறைசார் நிபுணர்கள் மத்தியில் முஸ்லிம்களின் சமய நடவடிக்கைகள் பண்பாட்டுக்கோலங்கள் தொடர்பில் இவர் அற்றிய உரை மெச்சத்தக்கது.
சிங்கள ஊடக சமூகம் நம்பக் கூடிய ஒரு பெருமகனாக இவர் ;கருதப்படுகின்றார்.தமிழ் ஊடகங்களில் இவர் பெரிதாக இடம் பெறாவிட்டாலும் சிங்கள ஊடகங்கள் இவரிடம் நேரமொன்றை ஒதுக்கிக்கொள்வதற்காக துரத்திக் கொண்டிருக்கின்றன. இவரிடமுள்ள வினாடிகள் கூட மிகப் பெறுமதியானவை.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இவர் மீது வைத்துள்ள அபரிதமான நம்பிக்கையின் அடையாளமாக ; செய்திப் பிரிவை இவரிடம் ஒப்படைத்திருப்பது .இதற்கு முன்னர் கூட கடந்த வருடத்தில் தமிழ் செய்திப் பிரிவும் இவரிடம் வழங்கப்பட்டிருந்தது.இவர் நல்லிணக்கத்துன் மென்மையான போக்குடன் இனமத பேதமின்றி பழகுவதால் எல்லோர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்தார்.
நல்ல குணதிசயங்களைக் கொண்டுள்ள இவரை சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் சமாதானத் தூதுவராக்கி எம்மக்கள் தொட்ர்பில் அவர்கள் கொண்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு இவரின் பங்களிப்பை நாம் பெறவேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் இனவாதம் மதவாதம் என்பன பெரும்பாண்மை வாதம் எல்லாம் மெலோங்கி அஹிம்சை வாதம் மனிதாபிமானம் எல்லாவற்றையும் மணடியிடச் செய்துள்ளது.அடிப்படை உரிமைகளின் ஜனநாயக உரிமைகளும் விழுமியங்களும் அரசியல் சாக்கடைக்குள் அகப்பட்டு துர்நாற்றமாகியுள்ளது.
ஐந்து வருட வாக்கரிமையின் அனுகூலங்கள் அடிப்பானை நிலையடைந்து விட்டால்.அகப்பைகள் எல்லாம் அடுக்களையை விட்டு வெளியேறுகின்ற நிலை வந்து கோடாரிகள் தூக்கப்பட்டு விறகுக் கட்டைகளைத் தெருத் தெருவாயாத் தேடித் திரிகின்றன. நடப்பவைகளைப் பார்க்கும் போது ஏனிந்த வாழ்க்கை என்று எண்ணத் தோன்றுகிறது.
ஊடகத்தின் மூலம் சமூகம் சார்பில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள நிலார் என் காசீமின் ஒத்துழைப்பைப் பெற்றால்; என்ன என்றொரு எண்ணக்கரு உள்ளத்தில் தோன்றியது. அதன் அடிப்படையிலேயே இதனைப் பதிவிட்டுள்ளேன்.
இதன் நிமித்தம் இவரைப் போன்று சிங்கள உடகவியலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ள என்.எம்.அமீன்.எம்.எஸ்.எம்.ஐய்யூப் நௌஷாட் மொஹிடீன் றினாஷ் மொஹமட் ஹில்மி மொஹமட். ஏ. எல் எம்.இர்பான் (வசந்தம்-ரீ.வி)சித்திக் ஹனீபா இளநெஞ்சன் முர்ஷிடீன் சிஹார்.அனீஸ் இவர்களைப் போன்ற இன்னும் பல சிரேஸ்டமானவர்களையும் சிங்கள மொழியில் ஆற்றல் மிக்கவர்களையும் இதனோடு இணைத்துக் கொண்டால் என்ன? நண்பர்களே! மேலே தரப்பட்டவர்கள் நினைத்த போது நெஞ்சில் நின்றவர்கள். நீங்கள் கருதும் பொருத்தமானவர்களையும் உள்ளீடு செய்யுங்கள்.
எல்லோரையும் ஒரு குழுவாக அமைத்து பிசாரப் பணியை ஆரம்பிக்க வேண்டும் இன்ஷாஹ் அல்லாஹ் முயற்சிப்போம்.
Post a Comment