Top News

சி.ஐ.டி அறிக்கையை, கத்தோலிக்க திருச்சபையிடம் ஒப்படைக்க பிரதமர் தீர்மானம்- என்.பெரேரா

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள பொலிஸ் அறிக்கையை கத்தோலிக்க திருச்சபையிடமும் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் தன்னிடம் கூறினார் என இராஜாங்க அமைச்சர் ரிரோசன் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து தங்களின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான் கடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான ஒரு தீப்பையே வேண்டி நின்றேன். இதனை நான் பாராளுமன்றத்திலும் சொன்னேன். ரிசாட் பதியுதீன் முன்னாள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது நான் அவரிடம் இந்த விசாரணைகளை முன்னெடுக்க இடமளித்து இராஜினாமா செய்யுமாறு கூறினேன். அவர் பின்னர் இராஜினாமா செய்தார்.

நான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சி.ஐ.டி. அறிக்கை குறித்து கலந்துரையாடினேன். இதன்போது, இந்த அறிக்கையை கத்தோலிக்க திருச்சபையிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதமர் என்னிடம் கூறினார் எனவும் ரிரோசன் பெரேரா மேலும் கூறினார்.

குறித்த அறிக்கையில், ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லையென சி.ஐ.டியின் அறிக்கையில் உள்ளதாக பிரதமர் ரணில் விகரமசிங்க கடந்த வாரம் திருகோணமலையில் உரையாற்றியதுடன், பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த அறிக்கையை பிரதி சபாநாயகரினால் வாசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post