இருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார் குருநாகல மருத்துவர் ஷாபியின் பாரியார் திருமதி இமாரா ஷாபி.
தமது கணவர் மீதான பழி சுமத்தல் மற்றும் நெருக்கடிகளின் பின்னணியில் குருநாகலில் தொடர்ந்தும் வாழ முடியாது என்பதால் அங்கு தமது வீட்டையும் கைவிட்டு வெளியேறிய நிலையில் தமது குழந்தைகளை சேர்ப்பதற்கு பாடசாலையொன்றைக் கண்டு கொள்ளவும் முடியவில்லையென தெரிவிக்கும் அவர், ஷாபியின் மனைவியென்ற ஒரே காரணத்திற்காக வீடு தரக்கூட அச்சப்படுகிறார்கள் என இன்றைய தினம் சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் அவரோடு மேற்கொண்ட நேர்காணலின் போது தெரிவித்தார்.
திருமதி ஷாபியின் ஆளடையாளம் மற்றும் பாதுகாப்பு கருதி அவரோடான வீடியோ நேரலை தவிர்க்கப்பட்டுள்ள அதேவேளை முழுமையான நேர்காணல் விரைவில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனகர் இணையம்
Post a Comment