அதுரலிய ரதன தேரோவுடன் சுமார் இரண்டு மணிநேரம் அவரது பன்சலையில் வைத்து உரையாட கிடைத்தது. மிகவும் நட்பு ரீதியாக பேசினார்.
உலமா என்பதன் பொருளை கேட்டறிந்தார்.
பலவிடயங்களை அவரே பேசினார். அவற்றில் பல நாட்டு நலன் கொண்டதாகும். சிலவற்றில் எனக்கும் அவருக்கும் முரண்பாடு தோன்றியது.
தேசிய நலன் கருதிய அவரது கருத்துக்கள்.
தேசிய உற்பத்தியை பெருக்க வேண்டும்.
விவசாயத்துறையில் இஸ்ரேலில் பாவிக்கப்படுவது போன்ற நவீன தொழில் நுட்பத்தை பாவிக்க வேண்டும்.
உணவு வகைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டு உற்பத்தையை ஊக்குவித்தால் 3 பில்லியன் வருமானம் வருடத்துக்கு கிடைக்கும்.
சோலா பவரை கொண்டு வந்தால் சீனாவில் இருப்பது போன்று பெற்றோல் இன்றி பெட்டறியை சார்ஜ் பண்ணி வாகங்களை இயக்க முடியும்.
இவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை மிக அழகாக விளக்கினார்.
அரசியலை பொறுத்தவரை தனது இலக்கை நேரடியாக கூறினார்.
ஸஹ்ரானுக்குப்பின் முஸ்லிம் தீவிரவாத அச்சம் உள்ளதால் முஸ்லிம்களை எதிர்த்தல் என்ற அடிப்படையிலேயே சிங்கள மக்களை ஒன்றிணைப்பது என்றே தனது அரசியல் இருக்கும். அத்துடன் தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ளல். இவ்வாறு சிங்களமும் தமிழும் இணைந்தால் முஸ்லிம்களிலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட முஸ்லிம்கள் எம்மோடு இணைவர் என்றார்.
முஸ்லிம்களை பொறுத்தவரை 80 வீதம் unp சார்பாகவே உள்ளனர். மற்ற 20 வீதமும் பக்க சார்பின்றி உள்ளனர். அவர்களை உங்களால் திரட்ட முடியுமா என கேட்டார்.
அதற்கு கடும் முயற்சியும் கோடிக்கனக்கான பணமும் தேவைப்படும் என்றேன்.
இங்குதான் உங்கள் சமூகம் தவறிழைக்கிறது. முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் ஒதுங்கி இருக்கின்றனர்.
அதன் பின் முஸ்லிம் சமூகம் பற்றிய தனது விமர்சனங்களை முன் வைத்தார்.
முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக ரதன தேரர் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அவை வழமையானவைதான்.
மதுரசா கல்வி நிறுத்தப்பட வேண்டும்.
காதி கோட் தேவையில்லை. உங்கள் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள். நீதி மனறத்துக்கு அப்பிரச்சினை வந்தால் ஒரே சட்டம் என்றே இருக்க வேண்டும்.
பெண் விருத்த சேதனம் குர் ஆனில் கூறப்படவில்லை. அதன் காரணமாக முஸ்லிம் பெண்களுக்கு பாலியலில் ஆர்வம் இல்லை. (அப்ப ஏன் சில பெண்கள் கள்ளக்காதலனுடன் ஓடுகிறார்கள் என கேட்க நினைத்தேன். வாயை மூடிக்கொண்டேன்)
என்னிடம் மட்டக்களப்பில் வைத்து ஒரு முஸ்லிம் எம் பியும் இதனை சொன்னார். இதன் காரணமாகவே முஸ்லிம் ஆண்கள் தமிழ், சிங்கள பெண்களை 2ம் 3ம் என முடிக்கிறார்கள் என்றார். (மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். தமிழ் சிங்கள பெண்களுக்கு ச்சூன் அதிகமோ என சொல்கிறீர்களா என கேட்க நினைத்தேன். பொறுமையாக இருடா என்றது மனம்) ஆனால் என் முக புன்னகை அவருக்கு காட்டிக்கொடுத்து விட்டது.
உண்மையாகவே சொல்கிறேன். அந்த முஸ்லிம் எம் பி சொன்னார். அவர் பெயரை இங்கு கூற முடியாது என்றார்.
(அந்த எம் பி 2வதாக தமிழ் பெண்ணை முடித்துள்ளார் போலும் என நினைத்துக்கொண்டேன்.)
பெண் விருத்தசேதனம் பற்றி கொஞ்சம் சொன்னேன். அவர் ஏற்கவில்லை. சரி இது அது பற்றி விவாதிக்கும் இடம் அல்ல என சுருக்கிக்கொண்டேன்.
மதுரசாக்கள் என்பன சமயத்தை போதிக்கும் தஹம் பாடசாலைகள் என்றேன்.
எனக்குத்தெரியும். நானும் தஹம் பாடசாலையில் சமயம் படித்தவன்தான். ஆனால் பாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தனியே அரபு மொழியில் மட்டும் இஸ்லாம் சமயம் போதிக்கும் முப்பதினாயிரம் மதுரசாக்கள் உள்ளன என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
அப்படியில்லை ஹாமதுருவே. நீங்கள் குர் ஆன் மதுரசாவையும் அரபு மதுரசாவையும் ஒன்றாக நினைத்துள்ளீர்கள் என்றேன். அவருக்கு கோபம் வந்தது. நீங்கள் ஒரு முஸ்லிமா என்றே தெரியவில்லை.
இப்படி மதுரசாக்கள் உள்ளன என்று தெரியாமல் இருக்கிறீர்கள் என்றார்.
நானும் மதுரசாவில் படித்தவன்தான். ஆண்டு 9 வரை கல்முனை ஸாஹிராவில் படித்து விட்டு மதுரசாவில் 6 வருடம் படித்தேன்.
பல மதுரசாக்களில் ஓ எல் மட்டுமல்ல ஏ எல்லும் படிப்பிக்கிறார்கள் என்றேன். அதனை தேரர் மறுத்தார். அது ஒரு சில மதுரசாக்கள் மட்டும்தான். 30 ஆயிரம் மதுரசாக்கள் 1 முதல் 12 வரை அரபியில் இயங்குகின்றன. வேண்டுமானால் முஸ்லிம் சமய அமைச்சிடம் கேட்டுப்பாருங்கள் என்றார்.
நீண்ட நேர உரையாடலின் பின் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் இது விடயம் பற்றி ஆராய்ந்து தேரருக்கு எழுத்து மூலம் தருவதாக சொன்னேன்.
என் தோளை தட்டி மிகவும் நட்பாக நல்லது என்றார்.
தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது மிகவும் கடுமையானவர் போன்று இருந்தார். நேரடியாக பேசும் போது மிகவும் நட்பாகவும் இனிமையாகவும் தெரிந்தார்.
- முபாறக் அப்துல் மஜீத்
Post a Comment