முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் ஆக்கபூர்வ மறுசீரமைப்பு இடம்பெறாமல் போகக்கூடிய ஆபத்து இருப்பதாக நான்கு முஸ்லிம் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மறுசீரமைப்பு இடம் பெறாமல் போகுமேயானால் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும் காதி நீதிமன்ற முறைமைகளின் கீழ் முஸ்லிம் பெண்கள் அநீதியையும் பாரபட்சத்தையும் தொடர்ந்தும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவை வருத்தம் தெரிவித்திருக்கின்றது.
கொழும்பு – இலங்கை மன்றக் கல்லூரியல் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே நான்கு அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் அவ்வாறு இவ்வாறு தெரிவித்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பேரியல் அஷ்ரஃப் உட்பட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் (புத்தளம்) , ஆராய்ச்சிக்கும் , வலுவூட்டலுக்குமான பெண்கள் அமைப்பு
(மட்டக்களப்பு), முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தக் குழு, பெண்கள் நடவடிக்கை வலையமைப்பு (வடக்கு – கிழக்கு ) ஆகிய நான்கு அமைப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:-
முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக்கப்படவேண்டும். பெண்களுக்கான உரிமைகள் மேலோங்கப்படவேண்டும். இஸ்லாத்தில் பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன . அவ்வாறாக ஒவ்வொரு பிரிவினருக்கு வேறுபட்ட சட்டம் என்னும் முறைமை நீக்கப்பட வேண்டும். மாறாக அனைவருக்கும் பொதுவான சட்டம் அமைக்கப்பட்ட வேண்டும்.
கட்டாயமாக திருமணச் சான்றிதழில் திருமணப் பெண்ணின் கையெழுத்தோ அல்லது விரலடையாளமோ இடுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும். விவாகரத்தின் போது ஒரு தரப்பினருக்கு மாத்திரம் தீர்மானம் எடுக்கும் உரிமை அளிக்கப்பட்ட நடை முறை மாற்றப்பட்டு பொதுவாக தீர்மானம் எடுப்பதற்கான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுவேண்டும்.
அத்துடன், காதி நீதிமன்றம் முறைமை இ;ல்லாதொழிக்கப்பட்டு அந்த நீதிமன்றம் குடும்ப பிணக்குகளை தீர்த்து வைக்கும் நீதிமன்றமாக்கப்படவேண்டும். இந்த முறைமையின் கீழ் நீதிமன்றத்தில் தனிநபர் உரிமைகள் மற்றும் தகவல்கள் பாதுகாக்கப்படல் வேண்டும்
Post a Comment