ஜனாதிபதிக்கு அதிகார பேராசை : ஜீ.எல்.பீரிஸ்

NEWS
0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிகார பேராசை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

19ம் அரசியல் அமைப்பினை சமூகப் புரட்சி என அறிமுகப்படுத்திய ஜனாதிபதி இன்று அதனை சாபக்கேடு என்பதற்கு என்ன காரணம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சியில் பீடத்தில் நீடித்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தினையே அவர் முன்னிலைப்படுத்துகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top