Top News

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று - நடக்கப்போவது என்ன?



அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று (11) இடம்பெறவுள்ளது.பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.

இன்றைய விவாதங்களின் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான முடிவை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.எவ்வாறாயினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதாக ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகத் தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி இந்தப் பிரேரணையை தாக்கல் செய்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post