Top News

கிழக்கு அர­சி­யல்­வா­திகள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு அடித்­த­ள­மி­டு­கின்­றார்கள்

கொழும்பில் தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் கருத்­து­ரைக்கும் ஒரு­சில கிழக்கு மாகாண அர­சி­யல்­வா­திகள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு அங்கு அடித்­த­ள­மி­டு­கின்­றார்கள். முறை­யற்ற செயற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்ள கிழக்கு மாகாண அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக அனைத்து சாட்­சி­யங்­க­ளையும் விரைவில் நாட்டு மக்­க­ளிடம் பகி­ரங்­கப்­ப­டுத்­துவோம் என்று பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

அத்­துடன், கிழக்கு மாகா­ணத்தில் சேவை­யாற்றும் பொலிஸார் தமது பொறுப்­புக்­களை முறை­யாகப் பின்­பற்­றா­மையின் கார­ண­மா­கவே அங்கு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் தழைத்­தோங்­கி­யது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் கட­மை­யி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள் தொடர்பில் பாது­காப்பு அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

பொது­பல சேனா அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஏப்ரல் 21 ஈஸ்­டர்­தின குண்­டு­த்தாக்­கு­தலின் சுவ­டுகள் இன்றும் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து முழு­மை­யாக மாற­வில்லை. தேசிய பாது­காப்பு பலப்­ப­டுத்த வேண்­டு­மாயின் ஓர் உறு­தி­யான தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும். அடிப்­ப­டை­வாதி சஹ்­ரானின் குண்­டுத்­தாக்­குதல் நாட்டில் நாளாந்தம் இடம்­பெறும் வீதி விபத்து போல் தற்­போது பாது­காப்பு பிரி­வி­னரால் நோக்­கப்­ப­டு­கின்­றது.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்க எந்த விட­யங்­களை முறை­யாகப் பின்­பற்ற வேண்­டுமோ அதில் எவரும் கவனம் செலுத்­த­வில்லை. தேவை­யற்ற விட­யங்­க­ளுக்கே பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்தும் தரப்­பினர் முழு­மை­யான கவனம் செலுத்­து­கின்­றார்கள்.

கிழக்கு மாகா­ணத்தில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் வலுப்­பெ­று­வ­தற்கு பொலி­ஸாரின் பல­வீ­னமே முக்­கிய கார­ணி­யாக காணப்­ப­டு­கின்­றது. சஹ்ரான் உள்­ளிட்ட அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­போது அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு எதி­ராக பொலிஸார் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. பாது­காப்புப் பொறுப்­பி­லி­ருந்த அனை­வரும் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும். இதில் கிழக்கு மாகா­ணத்தில் பொலிஸ் சேவை­யி­லி­ருந்து கட­மையை முறை­யாகப் பின்­பற்­றா­த­வர்­களும் உள்­ள­டக்­கப்­ப­டு­வார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு இட­மாற்றம் செய்­யப்­படும் பொலிஸ் அதி­கா­ரிகள் தங்­க­ளுக்கு தமது மேல­தி­கா­ரி­க­ளினால் வழங்­கப்­பட்ட ஒரு தண்­டனை என்றே கரு­து­கின்­றார்கள். இதனால் நெருக்­கடி ஏற்­ப­டக்­கூ­டிய அர­சியல் தலை­யீ­டுகள் உள்ள விட­யங்­களில் கவனம் செலுத்­து­வது இல்லை. தமது மேல­தி­கா­ரியை பழி­வாங்­கு­வ­தாக குறிப்­பிட்டுக் கொண்டு ஒட்­டு­மொத்த மக்­க­ளையும் நெருக்­க­டிக்குள் இன்று தள்­ளி­யுள்­ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் சேவை­யி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள் தொடர்பில் பாது­காப்பு அமைச்சு முழு­மை­யாகக் கவனம் செலுத்த வேண்டும். இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்க வேண்­டு­மாயின் கிழக்கு மாகா­ணத்தின் பொலிஸ் பிரிவில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ருதல் அவ­சி­ய­மாகும்.

கிழக்கு மாகாண ஒரு­சில அர­சி­யல்­வா­தி­களே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு ஆரம்ப காலத்­தி­லி­ருந்து அடித்­த­ள­மிட்­டுள்­ளார்கள். குண்­டுத்­தாக்­கு­தலை தொடர்ந்தும் அவர்­களின் முறை­யற்ற செயற்­பா­டுகள் மாறவில்லை. கொழும்பிற்கு வந்து இன நல்லிணக்கம் பற்றி பேசிவிட்டு கிழக்கிற்கு சென்று அடிப்படைவாதம் வலுப்பெற அனைத்து உதவிகளையும் அரசியல்வாதிகளே செய்கின்றார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஆதரவு வழங்கி முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்துள்ள அரசியல்வாதிகளின் அனைத்து சொத்து விவரங்களையும் வெகுவிரைவில் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

Post a Comment

Previous Post Next Post