இவ்வருடத்தின் மார்ச் 31 வரையான முதல் காலாண்டின் போது அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் இல்லை என்று தெரியவந்திருக்கிறது.
உள்நாட்டு இறைவரி சேவையினால் 13 மே 2019 திகதியிட்டு வெளியிடப்பட்ட ஒரு அறிவித்தலாக அமெரிக்க சமஷ்டிப் பதிவு இணையத்தளத்தில் இந்தப் பட்டியல் காணப்படுகின்றது.
31 மார்ச் 2019 வரையான முதல்காலாண்டில் அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் பெறப்பட்ட தகவலில் அமெரிக்கப் பிரஜாவுரிமையை இழந்த ஒவ்வொருவரினதும் பெயர்கள் உள்ளடக்கியதாக இந்தப்பட்டியல் காணப்படுகிறது.
இதேவேளை 17 ஏப்ரல் 2019 இல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கோத்தபாய ராஜபக்ஷ அந்நாட்டுப் பிரஜாவுரிமையை துறப்பதற்கு ஆவணங்களைத் தாக்கல் செய்தாரென்று கலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா தாக்கல் செய்த பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பிரஜாவுரிமை கைவிட்டவர்களின் பெயர்ப்பட்டியல் வெகுவிரைவில் வெளிவரும்.
Post a Comment