குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக சாட்சியளித்த மற்றும் வாக்குமூலம் வழங்கிய வைத்தியர்கள், தாய்மார்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர் ஷாபி தொடர்பில் குருநாகல் வைத்தியசாலையிலுள்ள ஆவணங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை வைத்தியர் ஷாபி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை வேறொரு குழுவிற்கு வழங்குமாறு கோரி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சிங்ஹல ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரரினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏலவே, ஷாபிக்கு எதிரான சரியான சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லையென கூறப்பட்ட நிலையில் இவ்வாறான இனவாத கருத்துக்கள் தொடர்ந்தும் பேசப்படுகின்றது!
Post a Comment