Top News

பிக்குகளின் மாநாட்டினால் கண்டியில் பலத்த பாதுகாப்பு!



கண்டியில் இன்று -07- பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பௌத்த பிக்குகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படவுள்ளதால், அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக பொது பலசேனா அமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கண்டி போகம்பரை மைதானத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது

தலதா மாளிகையில் நடக்கும் வழிபாடுகளை அடுத்து ஆரம்பமாகும் இந்த மாநாட்டில், மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த பிக்குகள் பங்கேற்கவுள்ளதால், 500 சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறப்பு அதிரடிப்படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டினால், பதற்ற நிலை ஏற்படக் கூடும் என்பதால், கண்டியில் இன்று முஸ்லிம்கள் தமது வணிக நிலையங்களை மூட முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post