Top News

கல்லால் எறிந்து கொல் முஸ்லிம்கள் சொறி நாய்கள் அல்ல : இந்நாட்டை சொர்க்கபுரியாக்குவர்

கடந்த 30 வருட யுத்தத்தின் முல்லிவாய்கால் நிகழ்வின் பின்னர் தமிழர்களை அடக்கிவிட்டதாக இருமாப்புக்கொண்ட பேரினம் அடுத்த சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்களை அன்று தொடக்கம் இன்று வரை சீண்டிக்கொண்டே இருக்கின்றது.

சீண்டுவதற்கான காரணம் என்ன?.

வட்டிப்பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சிங்களவர்த்தகர்கள் தமது வியாபரங்களை வட்டியினூடாக முன்னெடுக்க முடியாமல் தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.


விளக்கமாக கூறின் தாம் எடுக்கும் கடனுக்கான வட்டியை கட்டுவதற்காக தாம் விற்கும்
பொருட்களின் விலையை அதிகரிக்கின்றனர்.


தமது பொருட்களை அதிக விலையில் விற்பதனால் தமது இன வாடிக்கையாளர்களையே தற்கவைக்க முடியாமல் இழக்கின்றனர்.


"வட்டி பொருளாதாரத்தை வெறுத்து"தமது வியாபாரங்களை சிறப்பாக கொண்டு நடாத்தி தமது பொருட்களை குறைந்த இலாபங்களுடன் விற்பனை செய்யும் முஸ்லிம் வர்த்தகர்களுடன் போட்டி போட முடியாத நிலை மேற்கூறப்பட்ட சிங்கள வியாபாரிகளுக்கு ஏற்படுகிறது.


நஷ்டமடையும் வியாபாரத்தின் மூலமாக தாம் எடுத்த கடனுக்கான வட்டியைக்கூட கட்டமுடியாத சிங்கள வர்த்தகர்கள் விரக்தியின் உச்சிக்கே வந்து விடுகின்றனர்.


குறைந்த இலாபத்துடன் தமது வியாபாரங்களை செய்து முன்னேறுகின்ற முஸ்லீம் வியாபாரிகளுடன் போட்டி போடமுடியாமல் வியாபார நிலையங்களில் "ஈ விரட்டும்" சிங்கள வர்த்தகர்கள் எப்படி சரி முஸ்லீம்களின் வியாபாரங்களை முடக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டேயிருக்கின்றனர்.


வியாபார நிலையங்களில் " ஈ விரட்டும்" வியாபாரிகள் தமது கைகளிலுள்ள போன்களினூடாக Whatsapp குழுமங்களை உருவாக்கி வேலை வெட்டியில்லாத சில சிங்கள சமூகத்தில் விரக்தியடைந்த மனநோயாளர்களான அமித் வீரசிங்க டான் பிரசாத் போன்றவர்களை உசிப்பேற்றி அவர்களூடாக தமது பொறாமைத்தீயை ஆங்காங்கே வைத்து எமது பொருளாதாரத்தை அழித்து வருகின்றமை அன்றாட நிகழ்வுகளாக இருப்பதை காண்கிறோம்.


அமைதியை போதிக்கும் பௌத்த துறவிகளின் நிலையென்ன?


இந்த குழுக்களோடு "கருணை மைத்திரி "போன்றவற்றை போதிக்க வேண்டிய பௌத்த மதகுருமார்கள் இணைத்திருப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.


அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரேலிய ரத்ன தேரர் அவசர காலச்சட்டம் அமுலில் இருக்கின்ற போதே உண்ணாவிரதம் என்ற போர்வையில் அரசாங்கத்தை விரட்டி முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார்.


மேலும் அவர் பௌத்தர்களின் உணர்ச்சியை உசிப்பிவிட்டு தமது செயற்பாட்டை வெற்றிகரமாக செய்து அதில் ருசி கண்டு இன்னும் இன்னும் முஸ்லிம்களை நசுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.


அதற்கு முட்டுக்கொடுப்பவராக பிணை நிபந்தனைகளில் இருக்கின்ற ஞானசார தேரர் காணப்படுகிறார் இவர்களின் செயற்பாடு அவசரகால விதிமுறைகளின் படி ஒரு குற்றமாகும்.


இவர்களின் செயற்பாடுகளின் உச்சக்கட்டமாக அண்மையில் அஷ்கிரிய பீட மஹா நாயக தேரர் வராகொட ஶ்ரீ ஞானரத்ன தேரர் " முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்களை கல்லால் அடித்து கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன்" என்றும் சொல்லியிருக்கிறார்.


இது பற்றி இன்று (2/07/2019) எனது சிங்கள சேவைநாடுனர்களுடன்(Clients)சொல்லிக்கவலைப்பட்ட போது "எமது எந்த துறவிகளும் எது சொன்னாலும் நாம் அதற்கு மரியாதை செய்தேயாகவேண்டும் காரணம் அவர்கள் (சிவுர) காவியுடை அணிந்துள்ளார்கள் அதற்கு(சிவுர)நாம் மரியாதை செய்தேயாக வேண்டும்.


காவியுடை அணிந்த காரணமாக அந்தக்காவியுடையுடன் அவர்கள் எது பேசினாலும் அதனை தேவ வாக்காகவே நாம் கருதுகின்றோம்."என எனது clients எவ்வளவு அவர்கள் படித்திருந்த போதும் ஒட்டு மொத்த சிங்கள இனத்தின் மனநிலையை அப்படியே பிரதி பலித்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன்.பாவம் படிக்காத அமித் வீரசிங்கவும் டான் பிரசாத்தும் என்ன செய்வார்கள்.


இலங்கை நாட்டில் நீதி நியாயங்களெல்லாம்
(சிவுர) காவியுடைகளின் கீழ் மறைக்கப்பட்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.


எமது சகோதர முஸ்லீம் சட்டத்தரணிகளே சட்ட அறிவு எனும் அமானிதத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லையா?


மேற்கூறப்பட்ட பொறாமை கொண்ட வர்த்தகர்களினாலும் காவியுடைதாங்கியவர்களினாலும் தூண்டப்படுகின்ற காடையர்களினால் எமது உயிர்கள்பறிக்கப்படுகின்றபோதும், கஷ்டப்பட்டு உழைத்த சொத்துக்களை எமது வீடுகள் ,வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களை தீக்கிரையாக்குகின்ற போதும் சொத்துக்கள் சூரையாடுகின்ற போதும் அவர்களுக்கு எதிராக எமக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட "தற்பாதுகாப்பை எவ்வாறு பாவிக்கலாம்" என்பதை தாக்குதல் நிகழ்வுகள் நடைபெற சாத்தியப்படக்கூடிய இடங்களுக்குச்சென்று எமது மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு துணிவுள்ள சட்டத்தரணிகள் தேவைப்படுகிறார்கள்.


எல்லா நாசகார வேலைகளின் பின்னர் பல காடையர்கள் கைது செய்யப்படுகின்றனர்.அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகின்ற போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் தோன்றுவதற்கும் காடையர்களுக்கு ICCPR சட்டத்தின் கீழ் பிணை வழங்க நீதவான்கள் முயற்சிக்கின்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் தைரியமான சட்டத்தரணிகள் தேவைப்படுகிறார்கள்.


அண்மையில் மினுவாங்கொடை தாக்குதல் வழக்குகள் காடையர்களுக்கு எதிராக நடந்து கொண்டு இருக்கின்ற போது , எமது FAST & FIRST TEAM (FFT) 
PTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் விடுதலைகளுக்காக வேறு பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்காடியமையால் இதில்
கவனமெடுக்க முடியாமல் போய் விட்டது.


இவர்களுக்கு எது செய்தாலும் கேட்கப்பார்க்க ஆளில்லையென நினைத்து அண்மைய நிகழ்வில் விடுதலை செய்யப்பட்ட காடையர்கள் மீண்டும் இன்னும் ஓரிடத்தில் தாக்கக்கூடும்.


அதே போன்று அவசரகால சட்டம் அமுலில் இருக்கின்ற போது உண்ணாவிரதம் இருத்தல் ,அதே போன்று பொது கூட்டத்தை கூட்டி இன்னுமொரு இனத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் உதாரணமாக எதிர்வரும்
7/7/2019 அன்று ஞானசார தேரரின் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றுகூடல் ICCPR சட்டத்தின் கீழ் பிணையில் விட முடியாத குற்றங்களாகும்.


அண்மையில் தளதா மாளிகைக்கு முன் அத்துரேலிய ரத்தின தேரர் அதே போன்று கல்முனை உண்ணாவிரதங்கள் தொடர்பாக தைரியமான ஒரு நாட்டுப்பற்றாளர் "இவர்கள் மக்களுக்கு இடஞ்சல் ஏற்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள்" இது அவசரகால சட்டத்தின் படி குற்றமாகும் என முறைப்பாட்டை அருகிலுள்ள பொலிசில் செய்திருப்பார்களாயின் சம்பந்தப்பட்டவர்கள்
சிறைச்சாலைகளுக்குள் யாருக்கும் இடஞ்சல் இல்லாமல் உண்ணாவிரதங்களை மேற்கொள்ள வைத்திருக்கலாம்.


இவ்வாறான விடயங்களை விளங்கப்படுத்தி அதனை செயற்படுத்துவதற்கும் தைரியமான சட்டத்தரணிகள் தேவைப்படுகின்றனர்.


"குட்டக்குட்ட குனியிரவனும் மடையன் குட்ரவனும் மடையன்" எனும் பழமொழிக்கிணங்க குட்ரவன் எவராகவும் இருந்திட்டு போகட்டும் ஆனால் குட்டக்குட்ட குனிகிற நிலமை இனியேற்படாத வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்ல இறைவனுக்கு மாத்திரம் பயப்படுகின்ற சட்டத்தரணிகள் எம்மோடு இணையுங்கள். குழப்படிக்காரர்களுக்கு சட்டவாட்சி என்னவென காட்டி விடுவோம்.


சட்டவாட்சியைப்பற்றி பேசுகின்ற போது "மசாஹிமாவின் வழக்கை இலவசமாக செய்து தருகிறேன்" என பாரமெடுத்து வழக்கை கொண்டு நடாத்தும் சிங்கள இனத்தின் மனித இரத்தினங்களின் ஒன்றாகிய ஜனாதிபதி சட்டத்தரணி J.C.வெலியமுன அவர்களும் எமது சகோதர இனமாகிய தமிழர்கள் மத்தியில் எமது கண்ணில் தோன்றுகிறவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் ஆகும்.


எம்மிடையே வாழ்கின்ற நீதித்துறையிலே அஞ்சா வீரங்கொண்ட முப்பெரும் சரித்திரங்கள் இவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.இப்படியாவர்கள் எம்மத்தியில் இருப்பது எமக்கு எமது துறையில் துணிவுடன் செயற்பட ஒரு தைரியத்தை ஏற்படுத்துகிறது.


உள்நாட்டு நீதி பொறிமுறையில் எமக்கு நியாயம் கிடைக்கப்பெறாத பட்சத்தில் சர்வதேச மட்டத்தில் எமது பிரச்சினைகளை கொண்டு சென்று பேசுவதற்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது சகோதரர்கள் இறைவனிடத்தில் நன்மையினை நாடியவர்களாக எமக்கு உதவி ஒத்தாசை செய்ய துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.


FAST & FIRST TEAM ல் ஏற்கனவே துணிச்சல் மிக்க 8 சட்டத்தரணிகள் இவ்வாறான விடயங்களில் மிகவும் வீரியமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த ஆள்பலம் எமக்கு போதாமலிருக்கிறது.


மசாஹிமாவின் தர்மச்சக்கர வழக்கினை உயர்நீதிமன்றம் வரை இலவசமாக எம்மால் முன்னெடுத்துச்செல்வதைக்கண்ட வெளிநாட்டில் வாழ்கின்ற எமது உடன் பிறவா சகோதரர்கள் எமது செயற்பாட்டுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்.


அது அவர்களின் கடமையும் கூட .
எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படுகின்ற போது அதற்கான பதிலடிகளை நாம் கொடுக்க அதற்காக பயணிக்க விரும்பும் சட்டத்தரணிகள் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.


"கல்லால் எறிந்து கொல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சொறி நாய்கள் அல்ல இந்நாட்டை
சொர்க்கபுரியாக்குபவர்கள்” என்பதை பேரினத்திற்கு காட்டிட ஒன்று சேர்வோம்.

சட்டத்தரணி A.M.M.சறூக்.

Post a Comment

Previous Post Next Post