"அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தோற்கடித்தே தீருவோம்."- இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அரசைக் கவிழ்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அணியினர் பல வழிகளில் முயன்றனர். இறுதியில் எல்லாம் படுதோல்வியிலேயே முடிவடைந்தன. தற்போது அவர்களின் வழியில் - அவர்களின் ஆதரவுடன் மக்கள் விடுதலை முன்னணியினரும் அரசைக் கவிழ்க்கக் களமிறங்கியுள்ளனர். ஆனால், இந்த முயற்சியும் படுதோல்வியிலேயே முடிவடையும்.
அரசு மீது மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தப் பிரேரணையை எதிர்க்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்தே தீருவோம்" - என்றார்.
Post a Comment