பாராளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதியிடம் மற்றும் கொழும்பு பேராயரிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளது.
இருப்பினும் அண்மையில் ஜனாதிபதி தெரிவுக்குழு முன்னிலையில் எக்காரணம் கொண்டும் செல்ல மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மற்றும் பேராயர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுவதற்கு பதிலாக, ஜனாதிபதி மற்றும் பேராயரிடம் வாக்குமூலம் பெற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.
அவர்கள் இருவரையும் தெரிவுக்குழுவில் முன்னிலையாக்குவது பொருத்தமானதல்ல என தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர், தேவையான அனைத்து நபர்களும் தெரிவுக்குழுவுக்கு வரவழைக்கப்பட்டனர்.
அண்மையில் நடந்த விசாரணையில் ஜனாதிபதி மற்றும் பேராயர் குறித்து பல நபர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதால் இருவரிடமும் விசாரிக்க குழு முடிவு செய்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதுடன், இது தொடர்பாக இன்று தெரிவுக்குழு இறுதி முடிவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேவையான போதெல்லாம் தெரிவுக்குழு முன் ஆஜராகத் தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 13 பேரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
Post a Comment