Top News

இனவாதத்தால் முஸ்லிம் மக்கள் பாதிப்பு : கரு ஜெயசூரிய



சமூகத்தின் மத்தியில் காணப்படும் இனவாத முரண்பாடுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னேற முடியும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.இராணுவ வீரர் அசலக காமினியின் 28ஆவது நினைவு தின நிகழ்வு சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டதை தொடர்ந்து நாட்டு மக்கள் தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தமையே பல பிரச்சிகைகளுக்கு பிரதான காரணம்.காலனித்துவ ஆட்சியில் இருந்து எமக்கு இலகுவாக சுதந்திரம் கிடைத்தமையினாலேயே சுதந்திரத்தின் மதிப்பை பெரும்பாலும் மக்கள் அறிந்து கொள்ளவில்லை.பாரிய போராட்டத்தின் மத்தியில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் இன்று அனைத்து துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன.

பல்வேறு தேவையற்ற காரணிகளுக்கு மாத்திரம் மக்கள் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். ஜனநாயக தேர்தலில் வாக்களிப்பதால் மாத்திரம் உறுதிப்படுத்த முடியும்.

அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்துறைகளிலும் ஜனநாயகம் இன்று முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வழங்கியுள்ள ஜனாநாயகத்தை மக்கள் முறையாக பயன்படுத்தன் மூலம் வெற்றி பெற முடியம்.

இனவாத வன்முறைகளில் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் இருந்து விடுபட வேண்டுமாயின் முதலில் சமூகத்தின் மத்தியில் காணப்படும் இனவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

அனைத்து சமூகத்தையும் அரவணைக்கும் ஒரு அரசையே சர்வதேசம் அங்கீகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post