வைத்தியர் சாபீ தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்க சி.டி விக்ரமரத்ன முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வைத்தியர் சாபீ தொடர்பான வெளிப்படைத்தன்மை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வந்தது.
வைத்தியருக்கு எதிரானவர்கள் சிஐடியின் விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.
Dr சாபீ மீது CID மேற்கொள்ளும் விசாரணைகள் குறித்து சவால் விடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர்.
இருப்பினும் தற்போது IGPயும் இனவாதத்திற்கு ஆளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் பேசுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில் இதுவரை தெரியவந்ததாவது வைத்தியர் சாபி குருணாகலையில் கைது செய்யப்பட்டது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் தேவைக்கு அமைய என தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் 24ம் திகதி வைத்தியர் சாபிக் கைதுசெய்யப்பட்டதுடன், குருணாகல் வைத்திய சாலையின் வைத்தியர்கள் நால்வர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அளித்த வாக்கு மூலத்திற்கமையவே வைத்தியர் சாபிக் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
குறித்த வாக்குமூலம் வழங்குவதற்கு இரண்டு நாட்களின் முன்னரே வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிஐடியின் விசாரணையில் தெரியவந்தது.
எனவே, வைத்தியர் சம்பவத்திலிருந்து சிஐடியை ஒதுக்கி வைக்க பல தரப்பினரும் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment